You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமூக ஊடகங்களில் மோசமான படங்கள்: கோகுல இந்திரா உட்பட 15 பேர் மீது சசிகலா புஷ்பா புகார்
சமூகவலைத்தளங்களில் தன்னை தவறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்து கருத்துகள், படங்கள் வெளியிடுவதாகக் கூறி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ,நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட 15 நபர்கள் மீது முதல் தகவல்அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
சசிகலா புஷ்பாவின் அலுவலகத்தில் இருந்து அனுப்ப்பட்ட செய்திக்குறிப்பில்,'' மோசமான படங்களை எல்லா சமூகவலைத்தளங்களில் இருந்து அகற்றவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த படங்கள், கருத்துக்களை பரப்புவதன் பின்னணியில் கோகுல இந்திரா, சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர் பாலமுருகன், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை உள்ளிட்ட 15 நபர்கள் இருக்கிறார்கள்,'' என்று கூறப்பட்டுள்ளது.
சசிகலா புஷ்பாவின் புகாரை அடுத்து டெல்லி காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு துறை அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சசிகலா புஷபா பற்றிய தவறான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 2011ல் தனது வீட்டில் வேலை செய்யும் இரண்டு பெண்களை மோசமாக நடத்தியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஒரு புகார் பதிவாகியுள்ளது என்றும் அதன்பின்னர் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் இதுபோன்ற தவறான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் என்று ஒரு நபர் அலைபேசியில் அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்