You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணவரை பழிவாங்க 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிய பெண்
தனக்கு நேர்மையாக இல்லாமல் ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த அதிர்ச்சியூட்டும் ஆச்சரியம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது.
தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்த பின்னர், சன்திரா மிலெனா அல்மெய்டா 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிவிட்டார்.
இதன் காரணமாக, அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் தான், 30 வயதான இந்த பெண்மணி பணநோட்டுக்களை சாப்பிட்டிருப்பது வெளிப்படையானது.
அவருடைய வயிற்றில் பணநோட்டுக்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பது தெரிந்தவுடன், அல்மெய்டா இந்த பணத்தை மறைத்து வைத்துள்ளார்.
அந்த ரகசிய இடத்தை கண்டறிந்ததும், அதில் பாதி தொகையை வழங்க வேண்டும் என்று கணவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.. அதற்கு பின்னர்தான், 100 டாலர் பணக்கட்டை சாப்பிட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து, இத்தகைய தீவிர நடவடிக்கையில் அந்து் பெண்மணி இறங்கியுள்ளார்.
அவரது உடலை சோதனை செய்த பின்னர், இவ்வளவு பணநோட்டுக்களை அவர் சாப்பிட்டுள்ளதை உறவினர்களும், மருத்துவர்களும் அறிய வந்தனர்.
வயிற்றை கீறி, 57 நூறு டாலர் பணநோட்டுக்களை எடுத்துவிட்டதாக சன்தான்டர் பல்கலைக்கழக மருத்துவமனை அறுவை சிகிச்சை இயக்குநர் பௌலோ செர்ரானோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"சில பணச்சுருள்கள் பெருங்குடலுக்கு செல்கின்ற குடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன".
அவர் 100 டாலர் பணநோட்டுச் சுருள்களை சாப்பிட்டிருந்தார். சட்டவிரோதமாக கொண்டு செலவதற்கான எந்த வடிவத்திலும் அவை பொதியப்பட்டிருக்கவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
காணொளி: நிறமிழக்கும் இயற்கை ஓவியம்
"இந்த பெண் எதிர்கொண்ட பிரச்சனையின் காரணமாக, விரக்தியால் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தோன்றுகிறது. இத்தகைய செயல் நிச்சயமாக நோயாளியின் இயல்பான குடல் செயல்பாட்டையும், வாழ்க்கையையும் பாதிக்கும்" என்று பௌலோ செர்ரானோ கூறினார்.
கொலம்பியாவின் வட கிழக்கில் இருக்கும் பியேடிகுயஸ்டாவை சேர்ந்த சன்திரா மிலெனா அல்மெய்டா முழு சுகம் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட டாலர் பணநோட்டுக்களை கழுவிய பின்னர் அவை நல்ல நிலையில் உள்ளன. ஆனால், மற்றவை இரப்பை செரிமான திரவங்காளால் நாசமாகிவிட்டன என்று செர்ரானோ தெரிவித்தார்.
வயிற்றில் இருந்து பணநோட்டுக்களை எடுப்பது வெற்றிகரமாக அமைந்ததை தொடர்ந்து, மிகவும் சொகுசான விடுமுறை ஒன்றை கழிப்பதற்காக பணத்தை சேமிப்பதாக அல்மெய்டா கூறியுள்ளார்.
காணொளி: "ஆப்பிளில் இருந்து காதுகள் தயாரிக்கும் அதிசயம்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்