You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா பாலத்தில் மறியல்; போக்குவரத்து ஸ்தம்பிப்பு
விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையின் பிரதான பாலங்களில் ஒன்றான கத்திபாரா பாலத்தை சங்கிலியால் மறித்துக் கட்டி திடீரென போராட்டத்தில் இறங்கினர். இதனால், அப்பகுதியில் போராட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வியாழக்கிழமையன்று காலை ஒன்பதரை மணியளவில் கத்திபாரா பாலத்தின் மையப்பகுதிக்கு வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட சிலர் திடீரென பாலத்தின் குறுக்காக இரும்புச் சங்கிலியைப் பிடித்து, சாலையை மறித்தனர்.
தமிழக விவசாயிகளின் விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும், ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது, மீனவர்கள் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்குப் பிறகு காவல்துறை சங்கிலியை அகற்றியதோடு, போராட்டக்காரர்களைக் கலைந்துசெல்லும்படி கூறியது. ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால், பிறகு கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கும் இந்தப் பாலம் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் முடக்கப்பட்டதால், அண்ணாசாலை, ஈக்காடு தாங்கல், சின்னமலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்