காஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி
இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் இடைதேர்தல் நடைபெற்றபோது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
பிரிவினைவாத தலைவர்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லை பிரச்சனையின் மத்திய இடமாக முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான காஷ்மீர் உள்ளது.
காஷ்மீரில் பிரிவினைவாத எண்ணங்களை ஆதரிப்பதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்துகிறது; ஆனால் பாகிஸ்தான் அதனை மறுக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் காஷ்மீருக்கு உரிமை கோரி வருகின்றன. மேலும் காஷ்மீரின் சில பகுதிகளை இந்தியாவும் சில பகுதிகளை பாகிஸ்தானும் நிர்வகிக்கிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம், தீவிரவாத தலைவரான புர்ஹான் வானி இந்திய படைகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு அதிக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஏன் இந்த போராட்டம்?
இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள், காஷ்மீர் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த குழுக்கள் உள்ளூர் தேர்தலை புறக்கணித்தனர்;மேலும் வாக்காளர்களையும் புறக்கணிக்குமாறு கோரினர்;

பட மூலாதாரம், EPA
இந்திய அரசு "மக்களுக்கு எதிரான" போக்கை கடைபிடிக்கிறது என தெரிவித்து அரசியல்வாதி ஒருவர் பதவியை ராஜிநானாமா செய்தததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தலையொட்டி இந்திய அரசு பலத்த பாதுகாப்பை நிறுவி இருந்தது; மேலும் 20,000 கூடுதல் படைகளை அந்த பகுதிக்கு அனுப்பியிருந்தது.
மேலும் தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என இணையதள சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வன்முறை வெடித்தது எப்படி?
ஞாயிறன்று பட்கம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வாக்குச்சாவடியை தாக்கினர்.
போராட்டக்காரர்கள் வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தியதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாண்ட்மனு ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
போராட்டக்காரர்களை கலைக்க போலிஸார் கண்ணீர் புகையை பயன்படுத்திய போது மோதல் தொடங்கியது; மேலும் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலிஸார் மீது கற்களை வீசி எறிந்தனர்
பெட்ரோல் குண்டு தாக்குதல் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு உட்பட 200க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக ஷாண்ட்மனு நிருபர்களிடம் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் என்னாயிற்று?
சில இடங்களில் வாக்காளர்கள் வராமல் போனதால் தேர்தல் நிறுத்தப்பட்டது; மேலும் தேர்தல் அதிகாரிகள் சுமார் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், EPA
நாடாளுமன்றத்திற்கான மற்றொரு தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டு தேர்தலுக்கான முடிவுகளும் 15 ஆம் தேதியன்று வரவுள்ளது.
இந்திய நிர்வாகத்திற்குள்ளான காஷிமீர்ன் முன்னாள் முதலமைச்சர், ஃபரூக் அப்துல்லா இந்த வன்முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தேர்தல்கள் அமைதியாக நடந்திருக்க வேண்டும்..மக்கள் வாக்களிப்பதற்கான அமைதியான சூழலை அரசு உருவாக்கியிருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












