ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்களின் பலம் வெளிப்படும்: பாக்யராஜ்
ஆர் கே நகர் தேர்தல் மற்றொரு இடைத்தேர்தல் போல் இல்லாமல் மக்கள் தங்களது பலத்தை காட்டும் இடைத்தேர்தலாக இருக்கும் என்கிறார் நடிகர் பாக்யராஜ்.

பட மூலாதாரம், WIKI
பிபிசி தமிழின் பேஸ்புக் நேரலையில் பங்கேற்ற நடிகர் பாக்யராஜ், சமீபகாலமாக மக்கள் பெரிய அளவில் விழிப்புடன் இருப்பதாக தெரிகிறது என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் தற்போது நடந்துவரும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் போராட்டம் போன்றவற்றை பார்க்கும்போது, மக்கள் தங்களது உரிமைக்காக போராடமுன்வந்துள்ளனர் என்று தெரிகிறது என்றார்.
''தங்களை ஆள்பவர்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியுடன் இருப்பதாக தோன்றுகிறது. அது தற்போது நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தெரியும்,'' என்றார்.
சமகால பிரச்சனைகளை திரைப்படங்களாக எடுப்பது குறித்து பேசிய அவர், தமிழ் திரை உலகில் குறைந்துள்ளது என்றார். ''காதல், சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள்தான் வெற்றி பெறும் என்று பலரும் கருதுகின்றனர். அந்த வகை படங்கள் தோல்வி அடைந்தால், தங்களது தவறை உணருகின்றனர்,'' என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












