அழகில்லாத பெண்களால் அதிக வரதட்சணை : அரசு பள்ளிப்புத்தகக் கருத்தால் சர்ச்சை

அழகில்லாத பெண்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கு அதிக அளவில் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பள்ளி பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர அரசால் தயாரிக்கப்பட்டுள்ள சமூகவியல் புத்தகத்தில், அழகில்லாத மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களின் பெற்றோர்கள், பெரும்பாலும், மணமகன் வீட்டார் எதிர்பார்க்கும் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய சிரமத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் இந்த கருத்தில் திருத்தம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

பாடப்புத்தகத்தில் வெளியாகியுள்ள இந்த கருத்தை பல இந்திய ஊடகங்களும் ''அதிர்ச்சியான'' கருத்து என்று கூறியுள்ளன. ஒரு கட்டுரையாளர் இந்த கருத்து பரவலாக உள்ள பிற்போக்குத்தனமான மனப்போக்கும், அணுகுமுறைகளும் நடைமுறையில் இருப்பதைத்தான் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்