You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அறத்தை கைவிட வேண்டாம்' கமல்ஹாசன்
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தி வரும் சூழலில், வன்முறை சம்பவங்கள் பயன் தராது என்றும், போராட்டக்காரர்கள் அறத்தை கைவிட வேண்டாம் என்றும் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், 'அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை, தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், வன்முறை பயன் தராது என்றும், இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாகவும் இருக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மற்றொரு ட்விட்டர் செய்தியில், இது வரை பொதுச்சொத்துக்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது எனவும் இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும், அவ்வாறு செய்யும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்