பிபிசி 100 பெண்கள் 2021 - இந்த ஆண்டுக்கான பட்டியலில் உள்ள பெண்கள் யார்?

உலகெங்கிலும் உந்துதல் அளிக்கக்கூடிய மற்றும் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கக்கூடிய 'பிபிசி 100 பெண்கள்' பட்டியலை பிபிசி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி இப்போது வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பிபிசியின் 100 பெண்கள் பட்டியல் நமது சமூகம், பண்பாடு மற்றும் உலகையே மாற்றி அமைக்கும் வகையில் தங்கள் பங்களிப்பைத் தந்தவர்களாக இருக்கிறார்கள்.

மிகவும் இளம் வயதில் நோபல் அமைதிப் பரிசு பெற்றவரான மலாலா யூசுஃப்சாய், சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர் ஃபியாமே நவோமி மதாஃபா, தடுப்பூசி வழங்குவதற்கான வேக்ஸின் கான்ஃபிடன்ஸ் திட்டத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஹெய்தி லார்சன் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் சிமாமண்டா நங்கோசி அடீச்சே உள்ளிட்டோர் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

இந்த ஆண்டுக்கான பட்டியலில் சுமார் பாதி அளவுக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது அங்குள்ள கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அங்கு பேர்களின் கல்வி மற்றும் வேலை உரிமைகள் இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளன.

பாதுகாப்பு கருதி இவர்களில் பலரது பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன; புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை.

பிபிசி உலக சேவையின் அங்கமான பல்வேறு மொழிச் சேவைகளும் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் பட்டியல்

பிபிசி 100 பெண்கள் 2021 பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் படத்தின் மீதும் வைத்து சொடுக்கினால், அவர்கள் பற்றிய முழு விவரங்களும் திரையில் தோன்றும்.

தயாரிப்பு & தொகுப்பு: வலேரியா பெராசோ, அமலியா பட்டர்ஃப்ளை, லாரா ஓவன், ஜார்ஜினா பியர்ஸ், ஹனியா அலி, மார்க் ஷியா.

பிபிசி 100 பெண்கள் ஆசிரியர்: க்ளேர் வில்லியம்ஸ்

பிபிசி 100 பெண்கள் தயாரிப்பாளர்: பால் சர்ஜண்ட், பிலிப்பா ஜாய், அனா லூசியா கொன்சாலஸ்.

திட்ட மேம்பாடு : அயு வித்யானிங்ஷி இதாஜா, அலெக்ஸ்சாண்டர் இவானோவ்.

வடிவமைப்பு: டெபி லாய்சோ, ஜோ பார்த்தலோமியூ.

படங்கள்: ஜில்லா தஸ்தல்மாச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: