நேச்சர் கன்சர்வென்சி 2021: பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா - மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

நேச்சர் கன்சர்வன்சி 2021-ன் புகைப்படப் போட்டியின் வெற்றியாளராக அனுப் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய ஆப்ரிக்க குடியரசில் பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் நடந்து வரும் மேற்கு தாழ்நில கொரிலாவின் புகைப்படம்தான் அனுப் ஷாவிற்கு வெற்றியாளர் என்ற சிறப்பை பெற்று தந்துள்ளது.

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த அனுப், 4ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பரிசை பெறுகிறார்.

தி நேச்சர் சன்சர்வென்சி ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு இது 72 நாடுகளில் இயங்குகிறது.

இதோ போட்டியில் வெற்றி பெற்ற பிற புகைப்படங்களும், அதை எடுத்த கலைஞர்களின் விரிவாக்கமும்.

மக்களின் விருப்பம் பிரிவின் வெற்றியாளர்: மின்மினிப்பூச்சிகள், புகைப்படக் கலைஞர் ப்ரதாமேஷ் கடேகர், இந்தியா

மழைக்காலத்திற்கு முன், இந்த மின்மினிப்பூச்சிகள் இந்தியாவின் ஒருசில பகுதிகளில் இவ்வாறு ஒன்றுகூடும். அதிலும் சில குறிப்பிட்ட மரங்களில் இவ்வாறு ஒன்று கூடும்.

நிலப்பரப்பு வெற்றியாளர்: வறட்சி, டேனியல் டி க்ரான்விலே மான்கோ, பிரேசில்

அலிகேட்டர் ஒன்றின் சடலம், இது பிரேசிலில் உள்ள ட்ரான்ஸ்பாண்டனெய்ரா நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வறண்ட பூமியில் எடுக்கப்பட்டது.

2020 வறட்சி உச்சத்தில் இருக்கும்போது ட்ரோன் கேமராவை கொண்டு எடுக்கப்பட்ட படம்.

நிலப்பரப்பு, இரண்டாம் இடம்: பிரேசிலில் உள்ள செரா டோ மர் மலைத்தொடர், புகைப்படக் கலைஞர் டெனிஸ் ஃப்ரெய்ரா நெட்டோ

ஹெலிகாப்டரில் சென்ற கொண்டிருந்தபோது டைனோசர் தலை போன்று காட்சியளிக்கும் வெள்ளை போர்த்திய இந்த அழகிய மலைத்தொடரை கண்டேன் என்கிறார் இந்த புகைப்படக் கலைஞர்.

நிலப்பரப்பு சிறப்பு பிரிவு: வாழ்க்கையின் வண்ணம், ஸ்காட் போர்டெலி, ஆஸ்திரேலியா

மழைக்காலங்களில், வெப்பமண்டல வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கார்பெண்டாரியா வளைகுடாவில் உள்ள பல ஆறுகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் எல்லாம் சேர்ந்து இயற்கையின் இந்த பிரமிக்கும் காட்சியை உருவாக்குகின்றன.

மக்கள் மற்றும் இயற்கை பிரிவு வெற்றியாளர்: ஒரங்குட்டான்களை பாதுகாத்தல், அலெய்ன் க்ரூடெர், பெல்ஜியம்

இந்த புகைப்படம் ஒரு இந்தோனீசிய ஒரங்குட்டானை மீட்டு, மறுவாழ்வு அளித்து, வெளியேவிடுவதை ஆவணப்படுத்துகிறது.

சுமத்ரா ஒரங்குட்டான் பாதுகாப்பு திட்டக் குழு, ப்ரெண்டா இந்த மூன்று மாத ஒரங்குட்டானை அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்துகின்றனர்.

மக்கள் மற்றும் இயற்கை பிரிவு இரண்டாம் இடம்: மணல் புயல், புகைப்படக் கலைஞர் டாம் ஓவரால், ஆஸ்திரேலியா

மக்கள் மற்றும் இயற்கை சிறப்புப் பிரிவு: வீட்டிற்கு போகும் வழியில், மிங்சியாங், சீனா

நீர், வெற்றியாளர்; கசி அரிஃபுஜாமன், வங்கதேசம்

நீர், இரண்டாம் பரிசு; நீச்சல், ஜோரம் மென்னஸ், மெக்சிகோ

நீர், சிறப்புப் பிரிவு: பனி முட்டைகள், ஜார்ஜ் அண்ட்ரே ம்ரக்லியா, அர்ஜென்டினா

வனஉயிர்கள் வெற்றியாளர்: கொந்தளிப்பான நீச்சல், புத்திலினி டெ சோய்சா, ஆஸ்திரேலியா

கென்யாவில் உள்ள மசாய் மரா தேசிய சரணாலயத்தில் பெய்த அதீத மழையால் தலெக் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இந்த ஐந்து ஆண் சிறுத்தைகள் அச்சுறுத்தும் வகையிலான அந்த நீரோட்டத்தை கடக்க முயற்சிக்கின்றன.

அந்த சிறுத்தைகள் தோல்வியை தழுவிடுமோ என்று அஞ்சிய சமயத்தில் அது அக்கரை சேர்ந்தது பெரும் மகிழ்ச்சி. ஆனால் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்தின் தாக்கம்தான் இதுவும்.

வனவிலங்குகள், இரண்டாம் இடம்: சூரியகாந்திப்பூ, மாச்சேஸ் பியாசியாக், போலாந்து

அதிகப்படியான நீரால் இந்த சூரிய காந்தி மலர்களால் எழும்ப முடியவில்லை. இருப்பினும் பனிக்காலத்தில் இது ஆயிரக்கணக்கான பறவை இனங்களை கவர்கின்றது.

வனவிலங்குகள், சிறப்பு பிரிவு: தேடல், தாமஸ் விஜயன் கனடா

மனிதர்கள் மரங்களை வெட்ட ஒருபோது தயங்குவது இல்லை. ஆனால் இந்த போர்னியா காட்டு மனித குரங்குக்கு இதுதான் வாழ்விடம். இங்குள்ள லிச்சி போன்ற பழங்களை உண்டுதான் இது வாழ்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :