You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாலிபன் ஆளுகையில் ஆப்கன்: முதல் நாள் எப்படி இருந்தது? - படத்தொகுப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. நகரில் ரோந்து, போக்குவரத்து சீர்படுத்தும் பணி, சந்தேக நபர்களிடம் விசாரணை போன்ற நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
காபூல் நகரில் எடுக்கப்பட்ட சமீபத்திய படங்களின் தொகுப்பு இவை.
காபூல் நகரில் இயல்புநிலை காணப்படுவதாக அங்கு களத்தில் செய்தி சேகரித்த பிபிசியின் மாலிக் முடாஸ்ஸீர் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் காலையில் இருந்து அசம்பாவிதம் இல்லை என்றாலும் மக்களின் கூட்டம் விமான நிலைய முன்புற வாயில் பகுதியில் நிரம்பி வழிகிறது.
காபூல் விமான நிலையத்தில் 2,500 அமெரிக்கப் படையினர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக 400 பேர் இன்று காலையில் வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
காபூலில் நேற்று புறப்பட்ட ஒரு அமெரிக்க விமானப்படை விமானத்தில் தொங்கிக் கொண்டு செல்ல முயன்ற ஆப்கானியர்கள் மூன்றுபேர் விமானம் பறந்தபோது மேலிருந்து கீழே விழுந்து பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நாம் காணும் சம்பவங்கள் ஒரு துயரம் என்றும் அதை முன்கூட்டியே அனுமானித்து தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் செகரட்டரி ஜெனரல் ஏக்னெஸ் கல்லாமார்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்