You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்
உலகின் மிகவும் அரிதான பர்புள் - பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 198 கோடி ரூபாய் ஆகும்.
பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும்.
அதன் அளவு, நிறம் மற்றும் அமைப்பு ஆகியவையே இந்தக்கல் இவ்வளவு விலைபோக காரணம்.
இதனை ஏலம் எடுத்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அல்ரோசா என்ற ரஷ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஷ்ய - போலாந்து பாலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்று பெயரிடப்பட்டது.
2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்தக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரத்தினக்கற்கள்
மே 2016: 14.62 கேரட் கொண்ட ஓப்பன்ஹைமர் ப்ளூ என்ற மிகப்பெரிய வைரக்கல் ஒன்று 50.6 மில்லியன் டாலர்களுக்கு ஜெனீவாவில் ஏலம் எடுக்கப்பட்டது.
நவம்பர் 2015: 12.03 கேரட் கொண்ட நீல நிற வைரக்கல் 48.4 மில்லியன் டாலர்களுக்கு ஹாங்காங் கோடீஸ்வரர் ஒருவரால் வாங்கப்பட்டது. அவரது ஏழு வயது மகளுக்கு அதனை வாங்கி பரிசளித்தார்.
மே 2015: 25.58 கேரட் கொண்ட "புறா ரத்த" நிற அரிதான ரத்தினக்கல் ஒன்றை பெயர் வெளியிடாத நபர் ஒருவர் 30 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். வைரம் அல்லாத மிகவும் விலை உயர்ந்த கல்லாக இது கருதப்படுகிறது.
நவம்பர் 2013: உலகின் மிகப்பெரிய ஆரஞ்சு நிற வைரக்கல், ஒரு கேரட் 35 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. ஒரு கேரட் கல் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்பட்டது இதுவே முதல் முறை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: