You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் - ஜோ பைடன் முழுமையான உரை
"இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்," என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்." என அவர் கூறி உள்ளார்.
ஒற்றை அமெரிக்கா
"சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன்,"என அவர் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்குக் காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். தனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து தான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாக," கூறிய அவர், தற்போது கடமையாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
கசப்புகளை ஒதுக்கி வைப்போம்
தனது தேர்தல் பிரசாரத்திற்கு உதவிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பைடன், டிரம்பிற்கு ஆதரவளித்தவர்கள் குறித்தும் உரையாற்றினார். "ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம்," என்றார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவோம்
"எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக வாக்களித்தவர்களுக்காகப் பணி செய்வதுபோலவே நான் கடுமையாக பணி செய்வேன்," என்றார்.
"தனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான். நாம் இயல்பு நிலைக்குச் செல்ல அதுதான் ஒரே வழி," என்று கூறிய பைடன்.
"திங்களன்று, முன்னணி விஞ்ஞானிகள், நிபுணர்களுடன், பதவி மாற்ற வல்லுநர்களுடன் ஆலோசிப்பேன்," என்று கூறினார்.'
"எங்கள் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயலாக மாற்ற அவர்கள் உதவி செய்வர், இந்த பணி ஜனவரி 20ஆம் தேதி 2021ஆம் ஆண்டு தொடங்கும்," என்றார்.
உலகிற்கான வழிக்காட்டி
இந்த ஒன்றியத்தை 1860ஆம் ஆண்டு லிங்கன் காத்தார். 1932ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் அப்போதைய பிரச்சனைகளை தீர்க்க உறுதி பூண்டார். 1960ஆம் ஆண்டு கென்னடி எல்லைகளுக்கான புதிய உறுதியை அளித்தார். ஒபாமா புதிய வரலாற்றை படைத்தார். நம்மால் முடியும் என்றார்.
தேவதைகளுக்கும், இருளுக்கும் நடந்த தொடர் சண்டையால் உருப்பெற்ற தேசம் இது. தேவதைகள் நீடிப்பதற்கான தருணம் இது.
மொத்த உலகமும் அமெரிக்காவை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகிற்கான வழிக்காட்டி அமெரிக்கா என தனது உரையில் பைடன் கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- பைடன் அமெரிக்க அதிபராவதை டிரம்ப் நீதிமன்றம் மூலம் நிறுத்த முடியுமா?
- ஜோ பைடன் வெற்றி உறுதி: இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?
- அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி: எப்படி நடந்தது?
- அமெரிக்க தேர்தல் 2020: வெள்ளை மாளிகையில் அதிபராக நுழைய தகுதி பெற்ற பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: