You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: 2 லட்சம் பேர் பலி மற்றும் பிற பிபிசி செய்திகள்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன.
இந்திய நேரப்படி புதன் காலை வரை அங்கு 2,00,724 பேர் கோவிட்-19 காரணமாக மரணித்திருந்தார்கள்.
உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக இதுவரை 68 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் மற்றும் இரண்டு லட்சத்திற்கு இடையில் இருந்தால் இந்த நாடு மிகவும் நல்ல வேலை செய்திருக்கிறது என்று பொருள் என்று மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டு 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இன்னும் இரண்டு நாட்களில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பூஜ்ஜியத்தை நெருங்கும் என்று டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலை மிகவும் மோசமாக கையாள்வதாக டிரம்பின் நிர்வாகம் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்தியா, சீனா எல்லை - 13 மணி நேரம் நீடித்த கூட்டம்
கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லை கோடு (எல்ஏசி) பகுதியில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் படை பலத்தை அதிகரிப்பதை நிறுத்திக் கொள்ளத்தீர்மானித்துள்ளன.
இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ கட்டளைத் தளபதிகள் நிலையிலான ஆறாவது சுற்று கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. 13 மணி நேரம் நீடித்த அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படால் இருந்தன.
காஷ்மீரில் ஏற்பட்டது நிலநடுக்கமா? வெடிகுண்டு சம்பவமா?
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென நிலப்பகுதிகள் அதிர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால், அங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒரு சிலரும் மிகப்பெரிய வெடிச்சம்பவம் நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
விரிவாகப் படிக்க: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது நிலநடுக்கமா? வெடிகுண்டு சம்பவமா? - குழம்பிய நெட்டிசன்கள்
அதிர வைக்கும் ரகசியங்கள்
புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், உலகின் பல நாடுகளில் இருந்து பல பெரிய வங்கிகள் மூலம் இயங்கும் இந்த நிதி முறைகேட்டு வலையமைப்பை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
நிதி மோசடி குற்றங்களைத் தடுக்கும் அமெரிக்க அமைப்பான ஃபின்சென்(ஃபைனான்சியல் க்ரைம்ஸ் என்ஃபோர்ஸ்மென்ட் நெட்வொர்க்)-ன் அறிக்கையில் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகள் குறித்தும் பாகிஸ்தானில் இருந்து துபை மற்றும் அமெரிக்காவரை பரவியுள்ள ஒரு பெரிய மோசடி வலையமைப்பு குறித்தும் SAR வெளிப்படுத்துகிறது.
விரிவாகப் படிக்க: தாவூத், லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் தேவைக்காக நிதி முறைகேடு செய்த கனானி - அதிர வைக்கும் ரகசியங்கள்
சிஎஸ்கேயின் தோல்விக்கு காரணம்
விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி மாறிமாறி வருவது இயற்கை. ஆனால், பொதுவாக வெற்றியை விட தோல்விக்கான காரணங்கள் அதிகமாக விவாதிக்கப்படும்.
முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே அணி ) 2020 ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.
இரண்டாவது போட்டியில் மீண்டும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே, 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: