You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ்: குடியேற்றத் தொழிலாளர்கள் இடையே பரவும் கோவிட்-19 மற்றும் பிற பிபிசி செய்திகள்
குடியேற்ற தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் நெருக்கமான குடியிருப்புகளில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு போராடி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கட்டுமானம், கப்பல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இத்தகைய குடியிருப்புகளில் வசிக்கிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ளாகியுள்ள 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 95% பேர் குறைவான ஊதியம் பெறும் இந்த கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
தொழிலாளர்களை தங்க வைப்பதற்கான அனுமதி பெற்ற மற்றும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள இடங்களில்கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
செல்வ செழிப்பு மிக்க நகரமான சிங்கப்பூரின் பொருளாதாரம் தீவிரமான சரிவைச் சந்தித்து வருவதால் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் உள்ளனர்.
அதன் காரணமாக முடக்கநிலை தீவிரமாக அமல்படுத்தப்படாமல் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடிகர் சூர்யா அறிக்கை: 'நீட் எனும் மனுநீதி தேர்வு'
"நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தமிழகத்தில் நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விரிவாகப் படிக்க: "நீட் எனும் மனுநீதி தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கிறது" – நடிகர் சூர்யா
நேரு செய்த அதே தவறை நரேந்திர மோதியும் செய்கிறாரா?
1949 ஆம் ஆண்டில், மாவ் ஸே துங், சீன மக்கள் குடியரசை உருவாக்கினார். 1950 ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா அதை அங்கீகரித்து அரசியல் உறவுகளை ஏற்படுத்தியது.
இந்த வழியில் சீனா மீது கவனம் செலுத்திய முதல் கம்யூனிஸ்ட் அல்லாத நாடாக இந்தியா ஆனது. 1954 ஆம் ஆண்டில், திபெத்தின் மீதான சீன இறையாண்மையையும், இந்தியா ஏற்றுக்கொண்டது. அதாவது திபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டது.
விரிவாகப் படிக்க: சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா?
கொழும்புவில் யாசகரின் ஒரு நாள் வருமானம்
இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது.
திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர்.
விரிவாகப் படிக்க: கொழும்பு யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்கா காட்டுத்தீ: 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஓரிகன் மாநிலத்தில் மட்டும் டஜன் கணக்கானவர்களை காணவில்லை. மேலும் 'எந்த ஒரு மோசமான சம்பவத்திற்கும்' இந்த மாகாணம் தயாராக வேண்டும் என அவசரநிலைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரிவாகப் படிக்க: அமெரிக்காவை உலுக்கும் காட்டுத்தீ: 30க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: