You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா கால மந்தம்:லாபத்தில் சரிவு, 35 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் எச்.எஸ்.பி.சி வங்கி
இடைக்கால லாபம் சரிந்ததை அடுத்து பணி வெட்டுகளை துரிதப்படுத்த எச்.எஸ்.பி.சி வங்கி முடிவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக வாராக்கடன் அளவு 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை வரை உயரும் என்றும் அந்த வங்கி கூறுகிறது.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வங்கியின் மறுகட்டுமான திட்டத்தை இந்த வாராக்கடன் விஷயம் துரிதப்படுத்தும் என வங்கியின் தலைவர் நோயல் குயின் தெரிவித்துள்ளார்.
இதில் 35,000 பணி வெட்டுகளும் அடங்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களது செயல்பாட்டுச் சூழல் வியத்தகு அளவில் மாறிவிட்டதாகக் கூறுகிறார் நோயல்.
வங்கியின் வணிகத்தை வலுப்படுத்தக் கூடுதல் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அவர் கூறுகிறார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியாகக் கருதப்படும் எச்.எஸ்.பி.சி வங்கி வரி செலுத்துவதற்கு முந்தைய லாபத்தில் 65 சதவீத சரிவை இந்த வருடத்தின் முதல் பாதியில் சந்தித்துள்ளது. இது கணிக்கப்பட்டதை மோசமான சரிவாகும்.
கொரோனா வைரஸின் காரணமாக வாராக்கடனின் அளவு அதிகரித்ததாகக் கூறுகிறது அந்த வங்கி.
குறைந்த வட்டி சூழலும் எச்.எஸ்.பி.சி வங்கி மீது பெரியளவில் தாக்கம் செலுத்தி உள்ளது. இது வங்கியின் லாபத்தைக் குறைத்துள்ளது.
பணி வெட்டு
பிரிட்டனின் பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி, உலகம் முழுவதும் பணியாற்றும் 235,000 பணியாளர்களின் எண்ணிக்கையில் 35000 பேரை குறைக்கப் போவதாக ஜூன் மாதம் கூறி இருந்தது.
வங்கியின் கட்டமைப்பை மாற்றப் பிப்ரவரியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படியே இந்த பணி வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.
கொரோனா பரவலின் காரணமாக இந்த பணி வெட்டுகள் முதலில் கிடப்பில் போடப்பட்டதாக அந்த வங்கி கூறுகிறது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் பதற்றம்
எச்.எஸ்.பி.சி வங்கியின் தலைமையகம் லண்டனில் இருந்தாலும், பாதிக்கும் மேலான அதன் வருவாய், அதன் ஆசிய மையமான ஹாங்காங்கிலிருந்தே வருகிறது.
சீனாவுக்கு மேற்குலகிற்கும் நிலவும் பதற்றம் காரணமாக இப்போது அந்த வங்கி ஏராளமான சவால்களைச் சந்தித்து வருகிறது.
ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை எச்.எஸ்.பி.சி வங்கி ஆதரித்தது.
எச்.எஸ்.பி.சி வங்கியின் இந்த செயலை அமெரிக்காவும், பிரிட்டனும் கண்டித்தது.
பிற செய்திகள்:
- காஷ்மீரில் தலைவர்களின் செயல்பாடே இல்லாமல் ஜனநாயகம் எப்படி இருக்கிறது?
- புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய வல்லுனர் குழு: கே.ஏ. செங்கோட்டையன்
- “இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக பெரியளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை”
- “டிக் டாக் செயலியை வாங்குகிறீர்களா?” - மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பணம் செலுத்த சொன்ன டிரம்ப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: