You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் தள்ளிவைக்கலாம்: கொரோனா வைரஸை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை
இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, மக்கள் முறையாக, பாதுகாப்பாக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் வரை தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குப் பதிவில் முறைகேடு நடக்கும் என்ற டிரம்பின் கூற்று சரியென்று சொல்வதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும் தபால் வாக்குகளுக்கு எதிராக நீண்டகாலமாக கருத்து சொல்லி வருகிறார் டிரம்ப். அதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம் என்பது அவரது கருத்து.
கொரோனா உலகத் தொற்றால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார கவலைகளைக் கருத்தில் கொண்டு பல அமெரிக்க மாகாணங்கள் தபால் வாக்குப் பதிவு முறையை எளிதாக்கவேண்டும் என்று கூறுகின்றன.
அதே நேரம், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலைத் தள்ளிவைக்கும் உரிமை அதிபருக்கு இல்லை. அப்படி ஒரு முன்மொழிவு இருந்தால் அதனை காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றம்தான் அங்கீகரிக்கவேண்டும்.
டிரம்ப் என்ன சொன்னார்?
டிவிட்டரில் அடுத்தடுத்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் "எல்லோரும் தபால் மூலம் வாக்களிக்கும் நிலை" ஏற்பட்டால், நவம்பரில் நடக்கவுள்ள தேர்தல் "துல்லியமற்றதாகவும், வரலாற்றிலேயே அதிக மோசடியான தேர்தலாகவும்" இருக்கும் என்றும் "அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடத்தைத் தரும்" என்றும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: