You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவை தாக்கும் மற்றொரு அபாயம்: 32 பகுதிகளுக்கு ஆபத்து - விரிவான தகவல்கள் மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவை தாக்கும் மற்றொரு அபாயம்
கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவை மற்றொரு அபாயத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஹனா எனும் பெரும்புயல் நிலச்சரிவை டெக்சாஸில் ஏற்படுத்தி இருப்பதாகக் கூறும் அதிகாரிகள், பெரும் மழை பெய்யக் கூடும் என எச்சரக்கைவிடுத்துள்ளனர்.
32 பகுதிகளுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள டெக்சாஸ் ஆளுநர் க்ரேக், இந்த புயலை எதிர்கொள்ள கொரோனா தடையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மணிக்கு 137 கி.மீ வேகத்தில் வீசும் புயலின் காரணமாக வீட்டுக் கூரைகள் சரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் வகை ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவது ஏன்?
ஜூலை 29ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள அம்பாலாவிற்கு வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களுடன் இந்தியா, ஃபிரான்சிடமிருந்து ஹேமர் ஏவுகணை வாங்கவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசர காலப் பயன்பாட்டுக்கான உரிமை என்ற ரீதியில் இவை வாங்கப்படுவதாக அரசு தரப்பு கூறுகிறது. 60 முதல் 70 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய இந்த ஹேமர் ஏவுகணைகளை சீனாவுடனான போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டே வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
விரிவாகப் படிக்க:இந்தியா வாங்கும் ரஃபேல் போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன ஏவுகணைகள் - காரணம் என்ன?
புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்
புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று நாட்கள் பங்கேற்றுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறை.
விரிவாகப் படிக்க:புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்
ஜெயலலிதா: முன்னாள் முதல்வரின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியாக, அந்த இடத்தை அரசுடைமையாக்குவதற்கு உரிமையாளர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையாக ரூ.68 கோடியை நிர்ணயம் செய்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனம்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் மட்டும் 1,515 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :