You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் சுதந்திர தின விழா நடத்தும் டிரம்ப் மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் ஒரு விழாவினை அதிபர் டிரம்ப் நடத்துகிறார்.
கோவிட் 19 உலகத் தொற்றுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், ராணுவ விமானங்களின் சாகசங்கள், வானவேடிக்கை மற்றும் டிரம்பின் உரை ஆகியவை இடம்பெறுகின்றன.
கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்ற வாஷிங்டன் மேயரின் எச்சரிக்கையை மீறி, ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்டனர்.
``சீனாவிலிருந்து வந்த பயங்கர தொற்று நோயிடம் இருந்து மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம்`` என விழா நடப்பதற்கு முன்பு டிரம்ப் கூறினார்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அமெரிக்காவில் 52,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமையன்று 11,458 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக, புளோரிடா, கலிபோர்னியா போன்ற மாகாணங்களில் சுதந்திர தின கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 28 லட்சம் பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஆகஸ்டு 15ஆம் தேதி தடுப்பு மருந்து கிடைப்பது சாத்தியமா?
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் சமூக முடக்கம்: சென்னை, மதுரை - புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் என்னென்ன?
கொரோனா பரவலை குறைக்க சென்னை நகரத்தில் நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முடிவடைவதால், மறு உத்தரவு வரும்வரை மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ் சமூக முடக்கம்: சென்னை, மதுரை - புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: