கொரோனா வைரஸ் நெருக்கடியால் அதிகரித்துள்ள குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக இணையத்தில் வெளியாகும் குழந்தைகள் ஆபாச படங்களை அகற்றுவதில் "உலகளாவிய மந்தநிலை" உருவாகியுள்ளது என்று இப்படங்களை அகற்றுவது தொடர்பான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பல தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்த ஊழியர்களே பணிபுரிவதால் இணையத்தில் வெளியாகும் சட்டவிரோதமான குழந்தைகள் ஆபாச படங்களை நீக்குவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் ஆபாச காணொளிகளை சிலர் சட்டவிரோதமாக காண்பதும் பகிர்வதும் அதிகரித்துவிட்டது என இணையதள வாட்ச் பவுண்டேஷன் அமைப்பு கூறுகிறது.

இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையிலும் 90% மேற்பட்ட குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் சந்தேகம் ஏற்படுத்தும் வலைத்தள பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன என இந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது.

உலகளவில் ஐரோப்பாவில் இருந்து தான் அதிகமான குழந்தைகள் ஆபாச படங்கள் வெளியாகின்றன என்று இணையதள கண்காணிப்பு அமைப்பின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரை 1,498 குழந்தைகள் ஆபாச படங்களுக்கான யூ.ஆர்.எல் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 16-க்கு முன்பு நான்கு வாரங்களில் மட்டும் 14,947 படங்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமன் கிளர்ச்சி: சுயாட்சியை பிரகடனம் செய்த பிரிவினைவாதிகள் - என்ன நடந்தது?

தெற்கு ஏமனை சேர்ந்த பிரிவினைவாதிகள் அமைதி ஒப்பந்தத்தை மீறி சுயாட்சியைப் பிரகடனம் செய்துள்ளனர்.

ஏடனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தெற்கு இடைநிலை கவுன்சில் அவசரைநிலையைப் பிரகடனப்படுத்தி, இனி தாங்களே துறைமுகமான ஏடன் நகரம் மற்றும் தெற்கு மாகாணாங்களை ஆளப் போவதாகக் கூறி உள்ளது.

தெற்கு இடைநிலை கவுன்சிலை ஐக்கிய அரபு அமீரகம் ஆதரிக்கிறது.

கொரோனா வைரஸ்: 25 லட்சத்திற்கு சொத்தை விற்று ஏழைகளுக்கு உதவிய பாட்ஷா சகோதரர்கள்

''சாதி மதம் பார்த்து உணவளித்தால், இறைவன் நம்மை எப்போதும் மன்னிக்க மாட்டான்." இந்த வாக்கியம்தான் இரு சகோதரர்களின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது, 25 லட்சம் மதிப்பிலான சொத்துகளை விற்று இந்த இக்கட்டான சூழலில் ஏழைகளுக்கு உதவ செய்திருக்கிறது.

யார் இவர்கள்... என்ன செய்தார்கள்?

கர்நாடகாவை சேர்ந்த இரு சகோதரர்கள் முஜமில் பாட்ஷா மற்றும் தஜமுல் பாட்ஷா, கொரோனா காரணமாக பிறபிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக 25 லட்சம் மதிப்பிலான தங்கள் சொத்தை விற்பனை செய்திருக்கிறார்கள்.

கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” - யார் இந்த வட கொரிய தலைவர்?

உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்?

சரி யார் இந்த கிம் ஜாங் உன்?

குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பை ஜாங்-உன் ஏற்றுக்கொள்ள நேரிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுப்பாட்டில் இருப்பது எப்படி?

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.

மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன. இவர்கள் தலைமைத்துவத்துக்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகின்றனர் என ஃபோர்ப்ஸில் வெளியான ஒரு செய்தி கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: