டொனால்ட் டிரம்ப் - ‘பிரதமர் நரேந்திர மோதி ஒரு ஜென்டில்மேன்’

வரும் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பயணம் குறித்து தான் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோதி எனது நண்பர். மேலும் அவர் ஒரு சிறந்த ஜென்டில்மேனும் கூட. இந்திய பயணம் குறித்து நான் எதிர்பார்ப்புடன் உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

''எங்கள் நாட்டில் பல மில்லியன் மக்கள் உள்ளனர் என்று மோதி கூறுவார். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் மொட்டேரா கிரிக்கெட் மைதானம் வரையிலான வழியில் ஏறக்குறைய 50 முதல் 70 லட்சம் வரை மக்கள் இருப்பார்கள் என மோதி எண்ணுகிறார்'' என்பர் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

தனது மனைவி மெலினாவுடன் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளனர்.

முன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் கலந்துகொண்ட 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அப்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: