அமெரிக்காவில் காணாமல் போன நாய் அதன் உரிமையாளரிடம் இணைய காரணமான பியர் - சுவாரஸ்ய பகிர்வு மற்றும் பிற செய்திகள்

காணாமல் போன நாய் அதன் உரிமையாளரிடம் இணைய காரணமான பியர்

நம் ஊர் சினிமாக்களில் எல்லாம் குடும்ப பாட்டு பிரிந்து போன குடும்பத்தை இணைக்கும் தானே?

அது போல காணாமல் போன ஒரு நாய் அதன் உரிமையாளருடன் இணைய காரணமாக ஆகி இருக்கிறது பியர். இது சம்பவமானது அமெரிக்காவில் நடந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு மே மாதம் மோனிகா மேத்திக்கு சொந்தமான 'ஹேசல்' எனும் நாய் காணாமல் போய் இருக்கிறது.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. சில தினங்களுக்கு முன்பு ஒரு பியர் டின்னில் நாயின் முகம் அச்சடிக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் மோனிகா பார்த்திருக்கிறார். அந்த நாயை பார்த்ததும் மோனிகாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

ஃபுளோரிடா மாகாணத்தில் மோனிகா வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பியர் தயாரிப்பு மையத்தில் 'டே டே' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நாய் இருந்தது.

பின்பு அவர்களை தொடர்பு கொண்டு நாயை திரும்ப பெற்றிருக்கிறார்.

அதெல்லாம் சரி, ஏன் அந்த பியர் நிறுவனம் நாயை முகத்தை பியர் டின்னில் அச்சடித்தது என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. ஆதரவற்ற நாய்களை யாராவது தத்தெடுப்பதற்காகதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

ஷாஹீன்பாகில் சுட்டவர் ஆம் ஆத்மி கட்சிக்காரர் என்கிறது போலீஸ்

டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி போலீஸ்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் போலீசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனவரி 30-ம் தேதி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியபோது திடீரென அங்கு தோன்றிய ஒரு நபர் மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார்.

"இஸ்லாமிய பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம்"

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மதம் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்று ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருச்சியில் கொல்லப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் விஜய ரகுவின் கொலை மத ரீதியானது என்று குறிப்பிட்டார்.

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ் எம்.பி.க்கள் சொல்வதென்ன?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்பட்டது.

பாகிஸ்தான் பந்துவீச்சை அதகளப்படுத்திய யாஸவி ஜெய்ஸ்வால் - யார் இவர்?

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது, அது அவர்களின் ஏழ்மை நிலையை உயர்த்தாது என்ற பொதுவான கருத்து 2020 ஐபிஎல் ஏலத்தின்போது தவிடு பொடியானது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யாஸவி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: