You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவு: "என்னை வன்புணர்வு செய்து, என்மீது சிறுநீர் கழித்தார்” - ஒரு நடிகையின் வாக்குமூலம் மற்றும் பிற செய்திகள்
No என்றால் அவருக்கு No அல்ல
ஹாலிவுட் தயாரிப்பாளரான 66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் சூழலில், ஹார்வியால் தாம் அடைந்த இன்னல்களை பகிர்ந்துள்ளார் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக முயற்சித்த ஜெசிகா.
பின்வரும் தகவல்கள் உங்களுக்குக் கவலை அளிக்கலாம்.
இனி அவர் கூறியவற்றிலிருந்து,
2012 இறுதியில் அல்லது 2013 தொடக்கத்தில் ஒரு பார்ட்டியில் ஹார்வியை சந்தித்தேன். திரைப்பட நாயகி ஆக வேண்டும் என்ற என் விருப்பத்தை அவரிடம் பகிர்ந்தேன். அவர் என்னையும், ஒரு நண்பரையும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர கூறினார். நான் அந்த ஹோட்டல் அறைக்கு சென்றதும் என்னைப் படுக்கையில் தள்ளி வாய் வழி புணர்ச்சியில் ஈடுபட்டார்.
பின் அவருடன் ஒரு உறவில் இருந்ததாகவும், ஆனால் அந்த உறவில் ஏகப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்டதாகவும் ஜெசிகா கூறி உள்ளார்.
என்னை வன்புணர்வு செய்து, என் மீது ஒரு முறை சிறுநீர் கழித்தார்.
'நோ' என்ற வார்த்தையைக் கேட்டால், அவர் தூண்டப்பட்டுவிடுவார். வேண்டாம் என்றால் விடமாட்டார் என்று ஜெசிகா கூறி உள்ளார்.
இவ்வளவு நடந்தும் அவருடன் உறவில் இருந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, "இதற்கு சுருக்கமான பதில் ஏதும் என்னிடம் இல்லை" என்று கூறி உள்ளார்.
தொடக்கத்தில் பாலியல் தாக்குதலை எதிர்கொண்டது, என்னைக் குழப்பமடைய செய்தது. ஒரு பயத்துடன்தான் அவருடனான உறவைத் தொடர்ந்தேன் என்று ஜெசிகா கூறுகிறார்.
ஜெசிகா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹார்வி மறுக்கிறார்.
ஜெசிகா உடனான உறவானது இருதரப்பு ஒப்புதலுடன் நடந்த ஒன்று என்கிறார் ஹார்வி தரப்பு வழக்கறிஞர்.
தொடர்புடைய செய்தி:பாலியல் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய கோருகிறார் ஹார்வி வைன்ஸ்டீன்
அம்பேத்கரின் இதழியல் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவு
"இந்திய தேசத்தின் இயற்கையான அம்சங்களையும், மனித சமூகத்தையும் ஒரு பார்வையாளர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அநீதிகளின் புகலிடமாக இந்த நாடு இருக்கிறது என்றும், அது சந்தேகத்துக்கு இடமில்லாத பார்வையாகவும் தோன்றும்'' என்பதுதான் அம்பேத்கரின் முதல் இதழியல் கட்டுரையின் தொடக்கமாக இருந்தது. "மூக்நாயக்'' (குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர்) பத்திரிகையின் முதலாவது பதிப்புக்காக 1920 ஜனவரி 31ஆம் தேதி அவர் இந்தக் கட்டுரையை எழுதினார். அதன்பிறகு நிறைய மாறிவிட்டது என்றாலும், அதிகமாக மாறிவிடவில்லை.
இந்திய பட்ஜெட் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்
ந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 112ன் படி, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். 2017ல் இருந்து பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
விரிவாகப் படிக்க:இந்திய பட்ஜெட் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்
ஜாமியா பல்கலைக்கழக மாணவரை துப்பாக்கியால் சுட்டவர் சட்டப்படி சிறுவரா?
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் வெளியே போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது நேற்று ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மதிப்பெண் சான்றிதழ் ஒன்றை பகிர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சான்றிதழ் என பதிவிட்டிருந்தது. அதில் அவருக்கு 18 வயதுக்கும் குறைவானவராக இருந்தது தெரிய வந்தது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விரிவாகப் படிக்க:ஜாமியா பல்கலைக்கழக மாணவரை துப்பாக்கியால் சுட்டவர் சட்டப்படி சிறுவரா?
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று 2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
விரிவாகப் படிக்க:இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: