வட கொரியா: பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய கிம் ஜாங் உன் உறவினர் - நடப்பது என்ன?

பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய கிம் ஜாங் -உன் உறவினர்

சரியாக ஏழு ஆண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றி உள்ளார் கிம் ஹாங் உன்னின் உறவினர் கிம் கியாங். இவர் வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் மகள் ஆவார். அதாவது, தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்லின் தங்கை. இவரது கணவர் ராஜ துரோக குற்றஞ்சாட்டப்பட்டு கிம் ஜாங் உன் உத்தரவினால் கொல்லப்பட்டார். அதன் பின் பொது வெளியில் தோன்றாமல் இருந்த இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக வட கொரிய அரசு செய்தி முகமை புகைப்படம் வெளியிட்டுள்ளது.

கணவர் கொல்லப்பட்ட பிறகு கிம் கியாங் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பரவலாகக் கருதப்பட்டு வந்தது.

இப்படியான சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி இருப்பது, அவர் அரசு அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறாரோ என்ற கேள்வியைத் தோற்றுவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆறே நாளில் மருத்துவமனை கட்டும் சீனா

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சீன நகரமான வுஹானில் ஆறு நாட்களில் ஒரு மருத்துவமனையை உருவாக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை 830 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வுஹான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பு முதலில் ஏற்பட்டது. இதனால் அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய இடமும், மருந்துகளும் இன்றி மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பான் மற்றும் ஆதார் கார்டு

ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டுபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்காவிட்டால், அவர்கள் ஊதியத்திலிருந்து வரியாக 20 சதவீதம் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

சின்னத்திரையை ஆட்சி செய்த சீரியலின் இரண்டாம் பாகம் மக்கள் மனதை வெல்லுமா?

சித்தி - 80ஸ் கிட்ஸ் அனைவரிடமும் சென்று சேர்ந்த தொலைக்காட்சி தொடர். இப்போது 90ஸ் கிட்ஸ் வெப் சீரிஸ் என அப்டேட் ஆகிவிட்டார்கள்.

ஒரு பாஸ்வேர்டை ஒரு குழுவே பகிர்ந்து கொண்டாலும் Money Heist, Made in Heaven என வெப் சீரிஸை பார்த்து சமூக ஊடகங்களில் அலசி ஆராய்கிறார்கள்.

வெப் சீரிஸ், இணையத்தில் திரைப்படங்கள், அனைவரின் மொபைலிலும் 24 மணிநேரமும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ள இந்த நேரத்திலும் 90ஸ் கிட்ஸ் மீண்டும் சித்தி 2 வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனரா?

திமுக சேர்மன்களுக்கு குறைவான நிதிதான் கொடுப்போம் என்று கூறினாரா கருப்பண்ணன்?

திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி தொகுதிகளுக்கு குறைவான நிதிதான் ஒதுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டி அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி ஆளுநருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய கருப்பண்ணன், ''திமுக சேர்மன்களிடம் பணம் குறைவாகத்தான் கொடுப்போம்'' என பேசியுள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி துரைமுருகன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் மனு அளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: