சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் குறைந்தது 10 நகரங்களில், பயணக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மாகாணத்தின் மக்கள் தொகை 60 மில்லியன்.
வியாழனன்று ஹேபே மாகாணத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஹூபே மற்றும் ஹேபே மாகாணங்களை தவிர ஹெய்லாங்ஜியாங் மாகாணத்திலும் ஒருவர் உயிரிழந்தார்.
இது சீன புத்தாண்டு சமயம், எனவே பலர் தங்கள் வீடுகளுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆனால் ஹூபே மாகாணத்தில் பலர் இந்த புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை.
முன்னதாக சௌதி அரேபியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவரும் கேரளவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். எனினும், இது சீனாவில் தொடங்கி உலகின் பிற நாடுகளுக்கு பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸா என்று அவர் குறிப்பிடவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கொரோனா வைரஸ் குடும்பத்தில் இந்த புதிய வகை வைரஸ் உள்பட இதுவரை ஏழு வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சென்ற டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். கேரளா செவிலியருக்கு சீன வைரஸ் தொற்று உண்டாகியிருந்தால், இந்தியர் ஒருவர் இதனால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர், 830 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'சீன வைரஸ் இல்லை' - மறுக்கும் சௌதி
எனினும், சௌதி அரேபியாவில் இதுவரை சீனாவின் புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்று எதுவும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு உண்டாகியுள்ளது சீன கொரோனா வைரஸின் தொற்று இல்லை என்றும் சௌதி அரேபியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சௌதியில் இரு பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று, மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சின்ரோம் எனும் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தவிர அமெரிக்கா, தாய்லாந்து, வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கூறுவது என்ன?
"சௌதி அரேபியாவின் காமிஸ் முஷாய்ட் நகரில் உள்ள அல்-ஹயாத் மருத்துவமனையில் பணியாற்றும், பெரும்பாலும் கேரளவைச் சேர்ந்த, சுமார் 100 இந்திய செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட செவிலியருக்கு அசீர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது," என்று முரளீதரன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினர், தங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சௌதி வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் புதிய வகை புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
இருப்பினும் சென்னை உள்பட நாடு முழுவதிலும் உள்ள ஏழு பெரிய விமான நிலையங்களில் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரள முதல்வரின் கடிதம்
சௌதி அரேபியாவில் கேரள செவிலியர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியிருப்பதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு முறையான சிகிச்சை மற்றும் பிறருக்கு வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றை வலியுறுத்தி கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அசிர் அபா அல்-ஹயாத் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் கொரோனாவைரஸ்
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.
பிற செய்திகள்:
- "யாரிடமிருந்தும் எதையும் பறிக்க வேண்டிய அவசியமில்லை": துக்ளக் குருமூர்த்தி
- 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: அசாம் மாநில நபர் கைது
- இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள்: 2013க்குப் பிறகு 3 மனுக்கள் ஏற்பு, 32 மனுக்கள் நிராகரிப்பு
- "மியான்மரில் ரோஹிஞ்சாக்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்" - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













