You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் மீது போர் தொடுப்பதிலிருந்து டிரம்பை கட்டுப்படுத்தும் தீர்மானம் மற்றும் பிற செய்திகள்
இரான் மீது போர் தொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் டொனால்டு டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபையில் 224-194 என்ற கணக்கில் நிறைவேறியுள்ள இந்த தீர்மானம், அடுத்ததாக டிரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை கொண்டுள்ள செனட் சபையில் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல் தவிர்த்த மற்ற சூழ்நிலைகளில், இரானுடன் சண்டையிடுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை டிரம்ப் நிர்வாகம் பெற வேண்டும் என இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஆனால், அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளுமே தங்களது அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது?
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை மனிதர்களே இல்லாமல் வெறும் ட்ரோனை மட்டுமே பயன்படுத்தி கொன்றுள்ளது அமெரிக்கா.
தாங்கள் எந்த ட்ரோனை பயன்படுத்தி சுலேமானீயை கொன்றோம் என்பதை அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டு விமானப்படையில் இருக்கும் ட்ரோன்களிலேயே அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.
விரிவாக படிக்க:காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோன் செயல்படுவது எப்படி?
'இந்தியா நெருக்கடி நிலையில் உள்ளது'
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார்.
அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது," என தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க: ’இந்தியா நெருக்கடி நிலையில் உள்ளது’ - தலைமை நீதிபதி
தர்பார் - சினிமா விமர்சனம்
இளம் வயதில் தனது மனைவியை இழந்த கதாநாயகன், அநியாயத்தை வேரோடு வெட்டி வீழ்த்தும் போலீஸ் அதிகாரியாக எதிரிகளை தனது பாணியில் துவம்சம் செய்வதே தர்பாரின் கதை.
இதுவரை தமிழ் திரைப்படங்களில் வராத அபூர்வ கதை இல்லைதான். ஆனால் நடித்தது ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும்.
விரிவாக படிக்க:தர்பார் - சினிமா விமர்சனம்
கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் - நடந்தது என்ன?
கன்னியாகுமரியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: