You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Typhoon Phanfone: பிலிப்பைன்ஸை திணறடித்த சூறாவளியில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் சூறாவளி பேன்ஃபோன் ஏற்படுத்திய தாக்கத்தால் குறைந்தபட்சம் பதிமூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிக்கு நூற்று தொண்ணூறு கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், அங்கு விமானங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட சக்திவாய்ந்த சூறாவளியான ஹையெனின் வழியில் சமீபத்திய சூறாவளி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.
களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
அமைதியான கிறிஸ்துமஸுக்கு அந்நியப்பட்டு இருக்கிறது, மத்திய ஃபிலிப்பைன்ஸ்.
மணிக்கு கிட்டத்தட்ட இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், உள்ளூர் மக்களை அச்சுறுத்திய சூறாவளி பேன்ஃபோன், அழிவின் சுவடை விட்டுச் சென்றுள்ளது.
கன மழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பதினாறாயிரத்துக்கும் அதிகமானோர், மேம்பட்ட தங்குமிடங்களில் இரவைக் கழிக்க வேண்டியிருந்தது. இங்கு குறைந்தபட்சம், நூறு குடும்பத்தினர், வீடற்று உள்ளனர்.
பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வாழும் இந்த நாட்டில், உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால், கிறிஸ்துமஸுக்காக உறவினர்களை பார்க்கும் திட்டம் தடைபட்டது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேடான பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இலொயினா மாகாணத்தில் மட்டும் 11 பேரை காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
"நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டியுள்ளது. புயலின் காரணமாக, பிலிப்பைன்ஸின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள நீர் மற்றும் மின்சார சேவைகளை சரிசெய்வதற்கு பல வாரங்கள் ஆகும்" என்று பிபிசியிடம் பேசிய ஃபிலிப்பைன் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் கோர்டன் கூறினார்.
புயல்களால் தொடர் பாதிப்புக்கு உள்ளாகும் பிலிப்பைன்ஸ்
ஆண்டுதோறும் சுமார் இருபது புயல்களையாவது எதிர்கொள்ளும் ஃபிலிப்பைன்ஸ் மக்கள், வெப்பமண்டல புயல்கள் மற்றும் சூறாவளிக்கு பழக்கப்பட்டவர்கள்.
இரண்டாயிரத்து பதிமூன்றாம் ஆண்டில், ஹையென் சூறாவளியின் கடுமையான தாக்கத்தால் ஃபிலிப்பைன்ஸில் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதில் மோசமாக பாதிக்கப்பட்டு மீண்ட பகுதிகள், சமீபத்திய புயலால் மீண்டும் சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸை கடந்த இந்த புயல், தென் சீன கடலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: