இராக் அரசை எதிர்த்து போராடி உயிரிழக்கும் மக்கள் மற்றும் பிற செய்திகள்

இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களின்போது இராக் முழுவதும் சுமார் 150 பேர் இறந்தனர்.

அவர்களில் பாதிப்பேர் ராணுவம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களுக்குள் நுழைய முற்பட்டபோது இறந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்த அளவுக்கும் அதிகமான படைகளை அதிகாரிகள் பயன்படுத்தியதை இராக் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இராக் மதகுருக்களும், ஐக்கிய நாடுகள் மன்றமும் வன்முறைகளைக் கைவிட அனைத்து தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத உள்பிரிவுகளின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்துகொள்வதை ஷியா முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் அரசு நீக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஷ்மீர் பற்றி பேசினால் மலேசிய பிரதமருக்கு உள்நாட்டில் ஆதாயம் கிடைக்குமா?

"மலேசியர்கள் தங்கள் நாட்டுக்கு வெளியே நடக்கும் ஒரு பிரச்சனை குறித்துக் கவலைப்படுகிறார்கள் என்றால் அது இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த பிரச்சனை மட்டும்தான்," என்கிறார் மலேசிய அரசியல் விமர்சகர் முத்தரசன்.

அங்கு யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருவதால், பாலஸ்தீன அகதிகள் குறித்த அக்கறையும், ஆதரவும் மலேசிய முஸ்லிம்களிடம் எப்போதுமே உண்டு என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை: போர் பாதிப்புகளை ஆற்றுமா?

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வழியாக இந்த சேவை செயல்படவுள்ளது.

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆகியவை அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் பல செய்திகளைச் சொல்கின்றன.

இது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தி ஹிந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். பேட்டியிலிருந்து:

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படம் இது. கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் இது.

ஒரு போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து பெருமளவிலான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒரு பழைய காவல் நிலையத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கிறார் காவல்துறை அதிகாரியான பிஜோய் (நரேன்). அதை மீட்க நினைக்கிறது போதைப் பொருள் கும்பல்.

விரிவாகப் படிக்க:கைதி - சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :