You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான்: வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் - பின் வாங்கிய அரசு
வாட்ஸ் ஆப்-க்கு வரி விதித்த நாடு, கிளர்ந்தெழுந்த மக்கள் - பின்வாங்கிய அரசு
வாட்ஸ் ஆப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதாவது, வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஃபேஸ் டைம் ஆகிய ஆப்களின் வீடியோ சேவையைப் பயன்படுத்துவதற்குக் கட்டணமாக 0.20 டாலர்களை நிர்ணயத்தது. இதனை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்ததை அடுத்து காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. நிலைமை எல்லை மீறிப் போனதை அடுத்து அரசு சேவை வரி திட்டத்தை ரத்து செய்தது.
ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 பேர் உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
விரிவாகப் படிக்க:ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு
'பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்றால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்'
சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது.
எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு.
விரிவாகப் படிக்க:'பயங்கரவாதத்தை தடுக்கவில்லை என்றால் பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்'
ஒரு மலையின் கனவை சுமக்கும் விதையின் கதை
பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் மகாலட்சுமி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையின் உச்சியில் ஜமுனா மரத்தூருக்கு அருகில் அமைந்திருக்கிறது மலை கிராமான அரசவல்லி. முழுக்க முழுக்க பழங்குடியினரே வசிக்கும் இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் செகண்ட்ரி க்ரேட் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மகாலட்சுமி.
விரிவாகப் படிக்க:மகாலட்சுமி: ஒரு மலையின் கனவை சுமக்கும் விதையின் கதை
'வி' வரிசையில் இன்னொரு அஜித் படம்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படத்துக்கு 'வலிமை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏகே-60 அதாவது அஜித் 60 என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான இந்த திரைப்படத்தின் படபூஜை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றதாக செய்திகள் கூறுகின்றன.
விரிவாகப் படிக்க:அஜித் 60: 'வி' வரிசையில் இன்னொரு அஜித் படம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்