வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? - சமூக ஊடகத்தில் வகுப்பெடுத்த அமெரிக்க ராணுவ வீரர் மற்றும் பிற செய்திகள்

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? - சமூக ஊடகத்தில் வகுப்பெடுத்த அமெரிக்க ராணுவ வீரர்

வெடிகுண்டு தயாரிப்பது குறித்த தகவல்களை சமூக ஊடகம் வழியாக பகிர்ந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. முக்கியமான அமெரிக்க தொலைக்காட்சி ஊடக குழுமத்தை வாகன் குண்டு கொண்டு தாக்க அமெரிக்க ராணுவ வீரரான வில்லியம் ஸ்மித் வலியுறுத்தினர் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட இந்த 24 வயது ராணுவ வீரர் உக்ரைனில் வலதுசாரி குழுக்களுக்காக போராட விரும்புவது தொடர்பாக இணையத்தில் எழுதினார் என்கிறது அரசு தரப்பு. அதுமட்டுமல்லாமல் பெரும் சேதத்தை உண்டாக்கும் வெடிகுண்டுகளை உருவாக்குவது எப்படி என்ற தகவல்களையும் வலதுசாரி கருத்தியல் கொண்ட அவரது நண்பருடன் பகிர்ந்திருக்கிறார் என்கிறது எஃப்.பி.ஐ.

அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி

ஐநா பருவநிலை மாநாட்டில் நரேந்திர மோதி: "நிலக்கரி இல்லாத மின்சார இலக்கை இரட்டிப்பாக்குவோம்"

பல லட்சம் பேருக்கு தூய எரிவாயு இணைப்பு தந்துள்ளோம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா.வின் பருவநிலை உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் கூடியுள்ளது. அப்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்குரிய நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம்

முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விஹாரை வளாகத்தில் இறுதிக் கிரியைகளை செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட உத்தரவை மீறி, நீராவியடி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடத்தப்பட்டன.

பருவநிலை மாற்ற ஐ.நா. மாநாடு தீர்வு தருமா? 5 ஆண்டுகளில் கார்பன் மாசுபாடு 20 சதவீதம் அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்க நியூயார்க்கில் ஐநாவின் சிறப்பு மாநாடு சற்று முன்னர் கூடியுள்ள நிலையில், புவி வெப்பமடைதலின் அறிகுறிகளும் தாக்கங்களும் கடந்த சில ஆண்டுகளில் துரிதமாகி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை செய்துள்ளது.

வானிலை குறித்த தரவுகள் சேகரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில், 2014 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுகளே மிகவும் வெப்பமானது என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் தரவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் முடங்கியது

உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனமான 'தாமஸ் குக்'கின் சேவையை தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசிநேர முயற்சிகள் பலனளிக்காததால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளது.

178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இமயமலை வயகராவுக்கு தங்கத்தை விட ஏன் அதிக விலை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :