"தெய்வீக சக்தி கொண்ட மலைப்பாம்பு" - காட்டிலிருந்து கடத்திய பக்தர்கள் மற்றும் பிற செய்திகள்

"தெய்வீக சக்தி கொண்ட பாம்பு"

தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது .

பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா காட்டுப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்பட்டுள்ளது.

தெய்வீக சக்தி கொண்டது இந்த பாம்பு, இதற்கு உணவு படைத்தால் தாங்கள் விரும்பியது நடக்கும் என்று நம்பிய பக்தர்கள், அந்த பாம்பை பிடித்து வைத்துக்கொண்டு அதிகமான உணவுகளை கொடுத்துள்ளனர். இவற்றை உண்ண முடியாமல் பாம்பு திணறி உள்ளது.

இந்த சூழலில் அதிகாரிகள் அந்த பாம்பை மீட்டுள்ளனர்.

அதைப் பிடித்து வைத்திருந்தவர்கள் படைத்த ஆட்டை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பாம்பு, ஆட்டின் ரத்தத்தை கொடுத்தபோது அதை மட்டும் உட்கொண்டது.

எண்ணெய் வயல் தாக்குதல்: ஆதாரத்தை வெளியிட்டது செளதி

தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ஏவுகணை சிதறல்களை ஆதாரமாக காட்டியுள்ள செளதி அரேபியா, கடந்த வார இறுதியில் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரானின் பங்கு இருப்பதை இது காட்டுவதாக தெரிவித்துள்ளது.

18 ட்ரோன்கள் மற்றும் 7 ஏவுகணைகள் ஏவப்பட்ட திசை ஏமனுக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டுவதாக சௌதி தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியா எண்ணெய் வயல் தாக்குதல் இந்தியாவை கடுமையாக பாதிக்கப்போவது ஏன்?

வேப்பிங் குறித்த 5 முக்கிய தகவல்கள்

உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது,இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை தடைசெய்து ஆணை வெளியிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன?

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கத்தை மீறி திருமணம் நடக்க அனுமதி அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கோயிலை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் அந்தக் கோயிலுக்குள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மண்டபமாகக் கருதப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு: பதவிக்காலம், நடைமுறைகள் என்ன?

இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை வெளியிட்டது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என இந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :