You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் காடு பழங்குடிகள்: நிலத்தைக் காக்க ஒன்றிணைந்த எதிரிகள் மற்றும் பிற செய்திகள்
அமேசான் காடு: நிலத்தைக் காக்க ஒன்றிணைந்த எதிரிகள்
அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குறித்து அனைவரும் விவாதித்து வரும் சூழலில், தங்களது நிலத்தைக் காக்க, சயீர் பொல்சனாரூ அரசுக்கு எதிராக எதிரிகளாக இருந்த பழங்குடிகள் ஒன்றிணைந்துள்ளனர். கயாபோ இனக்குழுவும், பனரா இனக்குழுவும் கடந்த பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகின்றனர். 1968 ஆம் ஆண்டு கயாபோ இனக்குழு துப்பாக்கிகளுடன் வந்து பனரா இனக்குழுவைத் தாக்கியதில் 26 பனரா பழங்குடிகள் பலியாகினர். பிபிசி பிரேசில் சேவையிடம் பேசிய ஒன்றிணைந்த இந்த இருதரப்பு பழங்குடிகளும், "இப்போது எங்களுக்கு எதிராக எந்த பிணக்கும் இல்லை. எங்களது ஒரே எதிரி எங்களது நிலத்தை அபகரிக்கப் பார்க்கும் சயீர் பொல்சனாரூ தலைமையிலான பிரேசில் அரசுதான் எனக் குறிப்பிட்டுள்ளனர்."
ஒசாமா பின் லேடன் மகன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அல்-கய்தாவின் நிறுவனர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
ஹம்சா பின் லேடன் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக உளவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் கடந்த மாதம் தெரிவித்தன.
தந்தை ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து, அல்-கய்தா அமைப்பின் தலைவராக இவர் வருவார் என்று நம்பப்பட்டது.
அல்-கய்தாவின் முக்கிய உறுப்பினரும், ஒசாமா பின் லேடனின் மகனுமான ஹம்சா பின் லேடன், ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்கா நடத்திய தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார்" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
விரிவாகப் படிக்க: ஒசாமா பின் லேடன் மகன் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் டிரம்ப்
உங்களிடம் கூடுதலாக இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது எப்படி?
பல்லாண்டுகாலம் உழைத்தவர்கள் கடைசியில் ஓய்வுபெற்ற பிறகு, வேலை இல்லாமல் நாட்களை கழிக்க சிரமப்படுவது பற்றி நாம் சிந்திப்பது வழக்கம்.
தொழில்முறையில் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, வேலையில்லாத வாழ்க்கை என்பது, வாழ்வில் உற்சாகம் குன்றிய காலமாக இருக்கும்.
வேலை இருக்கும்போது, வார நாட்கள் அர்த்தம் உள்ளதாகவும், செயல் திட்டம் கொண்டதாகவும் இருக்கும். எதிர்காலத்தில் ஓய்வுநேரம் என்பது ஆரோக்கியமற்றதாவும், கலக்கம் தருவதாகவும் இருக்கும். இத்தகைய நிலை குற்றச்செயல்களுக்கும் போதை மருந்து பயன்பாடு போன்ற செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கலாம்.
விரிவாகப் படிக்க: உங்களிடம் கூடுதலாக இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது எப்படி?
சௌதி அரசின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல்
சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.
இரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சீறிய சி.என் அண்ணாதுரை
'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' எனும் பொருளை மையப்படுத்தி மாநிலங்களவையில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை ஆற்றிய உரையின் சுருக்கம்.
இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963 மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.
விரிவாகப் படிக்க: இந்தி திணிப்பு: உள்துறை அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சீறிய அண்ணா
Chennai மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - சிறுமி கமலியை உங்களுக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்