You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரபு மக்கள் மத நம்பிக்கையை இழந்து வருகிறார்களா? தெளிவுபடுத்தும் ஆய்வு முடிவுகள்
முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன் முடிவுகள் இங்கே
அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களை "மத நம்பிக்கையற்றவர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்வது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் எட்டிலிருந்து 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 30 வயதிற்குட்பட்ட மக்கள்தான் அதிகளவில் தங்களை மத நம்பிக்கையற்றவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது. இதில் விதிவிலக்கு ஏமன்.
பெண்கள் உரிமை
அதே போல ஒரு பெண் அங்கு பிரதமர் அல்லது அதிபராகும் உரிமைக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். இதில் அல்ஜீரியா மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. அங்கு 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஒரு நாட்டின் தலைவராக பெண் இருப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் வீட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் உட்பட, பலரும் கணவர்தான் குடும்பத்திற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று நம்புகின்றனர். மொரோக்கோ நாட்டில் மட்டும் சரிபாதிக்கும் குறைவான மக்களே கணவன்மார்கள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
ஒரு பாலுறவு
அங்கு பெரும்பாலான மக்கள் ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த அல்லது மிகக் குறைந்தளவு மக்களே ஒரு பாலுறவை ஏற்றுக் கொள்கிறார்கள். சமூக தாராளவாத கொள்கைகள் கொண்ட நாடாக பார்க்கப்படும் லெபனானில் கூட ஆறு சதவீத மக்களே இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு குறித்த கவலைகள் பலருக்கும் அதிகமாக இருக்கிறது. தங்கள் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எந்த நாடு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்ரேலுக்கு பிறகு, அமெரிக்காவே மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்றனர். மூன்றாவது இடத்தில் இரான் உள்ளது.
கணக்கெடுப்புக்காக கேள்வி கேட்கப்பட்டவர்களில் ஐந்தில் குறைந்தது ஒருவர் பிற நாடுகளுக்கு குடியேற யோசித்திருந்தார்கள் சூடானில் பாதி மக்கள் தொகையினர் குடியேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தனர்.
பொருளாதார விஷயங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்