ஹாங்காங்: போராட்ட நிலத்தில் அள்ளி கொடுக்கும் கொடை வள்ளல் - நிஜ சூப்பர்மேனின் கதை

ஹாங்காங்கின் பணக்கார மனிதரான லி கா-ஷிங் சீன பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டதாரி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

லி கா-ஷிங் தொண்டு நிறுவனம் ஷாண்டோ பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு வகுப்பில் சேரப்போகும் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கவுள்ளது.

90 வயதாகும் லி காஷிங்கின் சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைபடி 30.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கடந்த மாதம் அமெரிக்க கோடீஸ்வரரான ராபர்ட் எஃப் ஸ்மித் இதே மாதிரி ஒரு செய்தியை அறிவித்தார், அமெரிக்க கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவர்களின் கல்வி கடனை ஏற்பதாக அவர் தெரிவித்தார்.

லி கா-ஷிங் தொண்டு நிறுவனம் சீனாவின் குவாடாங் மாகாணத்தில் உள்ள ஷாண்டோ பல்கலைக்கழகத்தில் 2019 வருடத்திற்கான இளங்கலை பட்டதாரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும்.

இதற்கு ஒரு வருடத்துக்கு 14.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

இந்த திட்டம் குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும் என்று கி-ஷாங் தொண்டு நிறுவனம் நம்புகிறது.

மேலும், "மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச பொருளாதார சவால்களை பட்டதாரிகள் எளிதாக எதிர்கொள்ளும் விதமாக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவும் இது பயன்படும்." என்றும் கி-ஷாங் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

`சூப்பர் மேன்`

லி கா-ஷிங் குடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயர்ந்த ஒரு மனிதர். சிறுவயதில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இவர் 2019ஆம் ஆண்டு பணக்காரர்களுக்கான ஃபோப்ஸ் பட்டியலில் 28ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

தனது வர்த்தகத்தை தனது மூத்த மகனான விக்டர் லியினிடம் ஒப்படைத்துவிட்டு லி கடந்த வருடம் ஓய்வுப் பெற்றுக்கொண்டார்.

இவரின் வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகளில் பெற்ற வெற்றியால் ’சூப்பர்மேன் என்றும் அழைக்கப்பட்டார்.

சீன நிலப்பரப்பில் முதலீடு செய்த முதல் ஹாங்காங் தொழிலதிபரான லி கா-ஷிங்கிற்கு 2000ஆம் ஆண்டு பிரிட்டனால் கவுரவ பட்டமும் வழங்கப்பட்டது.

கடந்த மாதம் அட்லாண்டாவில் பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விக் கடன்களை தான் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க தொழிலதிபரான ராபட் எஃப் ஸ்மித் அறிவித்திருந்தார்.

இதன்மூலம் சுமார் 400 மாணவர்களின் கடன் சுமை இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த கடன்களின் மதிப்பு 40மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :