இமாயல பனிமலைகள் - பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து மற்றும் பிற செய்திகள்

இமாலயப்பனிப்படலம்

பட மூலாதாரம், NRO/USGS

இமாலய பனிமலைகளில் மிகப்பெரிய அளவில் பனி உருகி வருவது பனிப்போரின் போது உளவுப்பார்க்க பயன்படுத்த செயற்கைக்கோள்களின் புகைப்படத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் உளவுப்பார்க்கும் திட்டத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமீபத்திய விண்வெளி ஆய்வுகளையும் ஒப்பிட்டு, கடந்த 40 வருடங்களில் இமாலய பனிமலைகளில் உள்ள பனிப்படலம் உருகுவது இரு மடங்காகியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2000ஆம் ஆண்டிலிருந்து பனிமலைகளின் உயரம் ஒரு வருடத்தின் சராசரியாக 0.5மீட்டர் என குறைந்து வந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதற்கு பருவநிலை மாற்றமே ஒரு முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"இந்த புகைப்படங்களின் மூலம் இமாலய பனி மலைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. " என கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோஷுவா மாரெர் பிபிசியிடன் தெரிவித்தார்.

இமாலயப்பனிப்படலம்

பட மூலாதாரம், Getty Images

1970 மற்றும் 1980களில் அமெரிக்க உளவுத் திட்டத்தின்படி பூமியை ரகசியமாக படம்பிடிக்க சுற்றுவட்ட பாதைக்குள் 20 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன.

ஃபிலிம் ரோல்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட அதனை செயற்கைக்கோள் வெளிமண்டலத்துக்கு அனுப்பிவிடும், அது நடுவானில் ராணுவ விமானங்களால் பெறப்படும்.

2011ஆம் ஆண்டு இந்த புகைப்படங்கள் டிஜிட்டைஸ் செய்யப்பட்டது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமீபமாக நாசா மற்றும் ஜப்பான் விண்வெளி முகமையால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு இமாலய பனிமலைகளில் ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள் கண்டறியப்பட்டன.

Presentational grey line

எம்.ஹெச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு

மலேசியா

கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரி கணைகளை கொன்று சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் தொடங்கவுள்ளது.

ஜூலை 17 ஆண்டு ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய எம்.ஹெச் 17 விமானம் அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை அடைய இருந்தது.

புறப்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்ய - உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

Presentational grey line

ஜமால் கஷோக்ஜி வழக்கு: 'சௌதி இளவரசர் விசாரணையை சந்திக்க வேண்டும்'

கஷோக்ஜி

பட மூலாதாரம், AFP

சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததாக ஐநா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிச்சையான மற்றும் நடுநிலையான அடுத்த விசாரணை நடக்கும் என சிறப்பு விசாரணை அதிகாரி ஆக்னஸ் காலாமார்ர்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

கஷோக்ஜி இஸ்தான்புல்லிலுள்ள சௌதி தூதரகத்தில் சௌதி முகவர்களால் கொல்லப்பட்டார்.

தாங்கள் இளவரசர் முகமதின் ஆணைப்படி செயல்படவில்லை என சௌதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதில் சௌதி தன் முதல் கட்டமாக அடையாளம் தெரியாத 11 பேரின் மேல் குற்றம்சாட்டி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்க கோரியது.

ஆனால் இந்த விசாரணை சர்வதேச நடவடிக்கைகளையும் அதன் தரத்தையும் சரியாக கடைபிடிக்காததால் நிறுத்தி வைக்கப்படுகிறது என காலாமார்ட் கூறியுள்ளார்.

Presentational grey line

மகாராஷ்ட்ரா தலித் சிறுவனுக்கு கொடிய தண்டனை

மகாராஷ்ட்ரா தலித் சிறுவனுக்கு கொடிய தண்டனை

பட மூலாதாரம், Thinkstock

கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்த தண்டனையின் காரணமாக அவரது பின்பகுதியில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுவனின் பெயர் ஆர்யன் கட்சே. அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரில், போலீஸார் அமோல் தோர் எனும் நபரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் இது குறித்து விசாரித்து வருகிறது.

அமோல் தோர் குற்றப் பின்னணி உடையவர்.

சாராயம் விற்றது தொடர்பாக அவர் மீது வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Presentational grey line

சிங்கப்பூர் நீரின்றி தவித்தபோது என்ன செய்தது தெரியுமா?

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று மாநில அரசு அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கும் வேளையில், மக்கள் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? இதிலிருந்து மீண்டு வரவே முடியாதா? இயல்பு நிலைக்கு திரும்ப வேறென்ன வழிகள் இருக்கின்றன? உள்ளிட்ட தமிழக மக்களின் கேள்விகளுக்குரிய பதில்களை கை மேலே வைத்திருக்கும் சிங்கப்பூரின் தண்ணீர் மேலாண்மை திட்டத்தை அலசுகிறது இந்த கட்டுரை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :