அமெரிக்காவில் மகளைக் காப்பாற்ற சுறா மீனிடம் போராடிய தந்தை மற்றும் பிற செய்திகள்

மகளைக் காப்பாற்ற சுறா மீனிடம் போராடிய தந்தை

பட மூலாதாரம், GOFUNDME/PRAYERS FOR PAIGE

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் அட்லாண்டிக் கடற்கரையில் சுறா மீனின் தாக்குதலுக்கு உள்ளான பெய்ஜ் வின்டர் எனும் 17 வயது பதின்வயதுப் பெண்ணை அவரது தந்தை போராடிக் காப்பாற்றியுள்ளார்.

அவரைக் காப்பாற்றும் முயற்சியின்போது, அவரது தந்தை அந்த சுறா மீனை ஐந்து முறை குத்தியதாக ஜேனட் வின்டர் எனும் அப்பெண்ணின் தந்தை வழிப் பாட்டி தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று நடந்த இந்தத் தாக்குதலில் பெய்ஜ் வின்டர் வலது கையில் சில விரல்களையும், முழங்காலுக்கு கீழே இடது காலையும் இழந்துள்ளார். இப்போது அவர் மருத்துவமனையில் குணமாகி வருகிறார்.

கடல்வாழ் உயிரின்களை பாதுகாப்பதற்கு ஆதரவான பெய்ஜ் வின்டர், சுறா மீன்களை பாதுகாக்கவும் அவற்றின் வாழ்விடங்களில் கண்ணியமாக நடத்தப்படவும் வேண்டும் என்று கூறியுள்ளதாக அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Presentational grey line

காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம்

Air Force Plane

பட மூலாதாரம், NURPHOTO

இந்திய விமானப்படையின் AN 32 விமானம் அசாம் ஜோர்ஹட் தளத்தில் இருந்து 12:25 மணிக்கு புறப்பட்டது.

கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.

Presentational grey line

''புத்தரால்கூட இலங்கையை காப்பாற்ற முடியாது''

ரஊப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன்
படக்குறிப்பு, ரஊப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன்

'முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையாகிப் போனது' வருத்தமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் மாகாண ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று மாலை தங்கள் பதவியில் இருந்து விலகியிருந்தனர்

Presentational grey line

புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் போதுமானதா?

இந்திக்கு எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் பல, குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல என வரைவு மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை சமூகவலைதளங்களில் பலரும் வரவேற்றிருந்தாலும் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், புதிய கல்வி வரைவு மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துவதாக சில கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Presentational grey line

மக்களவைத் தேர்தலில் பெண்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள்?

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளை பலவிதமாக நாம் பார்க்கலாம். பாரதிய ஜனதா கட்சியின் இந்த இமாலய வெற்றிக்கும் பெண்கள் அளித்த வாக்குகளுக்கும் தொடர்பு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இந்த தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்ததோடு, அவர்கள் பெரும்பாலும் பாஜகவுக்கே வாக்களித்துள்ளதாக தெரிகிறது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :