கேன்ஸ் விருது பெற்ற தென் கொரிய இயக்குநர் பாங் ஜோன் ஓ: 'பேரசைட்' திரைப்படம் தந்த பரிசு மற்றும் பிற செய்திகள்

கேன்ஸ் விருது பெற்ற தென் கொரிய இயக்குநர்

கெளரவமிக்க கேன்ஸ் பால்மி டோர் விருதை தென் கொரிய இயக்குநர் பாங் ஜோன் ஓ பெற்றார். அவர் இயக்கிய பேரசைட் என்னும் அவல நகைச்சுவைத் திரைப்படத்திற்காக அந்த விருது வழங்கப்பட்டது. பதினொரு நாட்கள் நடைபெற்ற விழா முடிவுக்கு வந்தது. இதில் புதிய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

72 வருட கேன்ஸ் வரலாற்றில் முதல் முதலாக கருப்பின பெண் மேட்டி டியோப்பும் விருது பெற்றார்.

தேசிய கவனம் பெற்ற வேட்பாளர்களின் நிலை என்ன?

இந்திய மக்களவைத் தேர்தல் 2019, நட்சத்திர வேட்பாளர்கள் சிலருக்கு வீழ்ச்சியாகவும், வேறு சிலருக்கும் எழுச்சியாகவும் அமைந்து விட்டது. அவ்வாறு இந்த மக்களவைத் தேர்தலில், வென்ற, வீழ்ந்த பெருந்தலைவர் யார் என இதில் பார்ப்போம். ராகுல் காந்தி உத்தர பிரதேச அமேதி மக்களவைத் தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட பி.பி. சுனீரை விட 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் அதிகமாக பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

தமிழக மக்களவை உறுப்பினர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லையா?

தமிழகத்திலிருந்து மக்களவை செல்லும் உறுப்பினர்களின் பட்டியல் கலவையானது. பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள், முதல்முறையாக மக்களவை செல்லும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.இந்தத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து பெரிய கட்சிகளும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளித்ததோ அதே அளவு புதுமுகங்களுக்கும் வாய்ப்பளித்து இருக்கிறது. களம் கண்ட புது முகங்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

தெரீசா மே விலகல்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கியது

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரீசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்கள். ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் புதிய நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுக்களின் நிர்வாகிகளையும் , கொறடாக்களையும் திராவிட முன்னேற்ற கழகம் இன்று, சனிக்கிழமை, அறிவித்துள்ளது. திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :