You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செயற்கை நுண்ணறிவில் நியாய தர்மங்களை கடைபிடிக்க முனையும் கூகுள் மற்றும் பிற செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் நியயா தர்மங்களை பின்பற்றும் நோக்கில், விழுமியங்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை கூகுள் நிறுவனம்.
வளரும் தொழில்நுட்பங்களை கூகுள் பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆளில்லா உளவு விமானங்களை இயக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உடனான ஒப்பந்தத்தை கூகுள் புதுப்பிக்கப்போவதில்லை என 2018இல் கூகுள் அறிவித்திருந்தது.
'ரோபோக்கள் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும்,' எனும் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்த பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா பிரிசன், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை துணைச் செயலர் வில்லியம் ஜோசப் பர்ன்ஸ் உள்ளிட்ட எட்டுப் பேர் கூகுள் அமைத்துள்ள இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
மதமாற்ற வழக்கில் புதிய திருப்பம்
பாகிஸ்தானில் இரண்டு இந்து பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக சொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் தங்களுக்கு முறையே 18 மற்றும் 20 வயது ஆகிறது என்றும், தாங்கள் தாங்களாகவே இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாரிசு அரசியல் எப்படி வெல்கிறது?
மக்களாட்சி என்பது மன்னராட்சிக்கு மாற்றாக உருவானது. மன்னராட்சியில் மன்னரின் வாரிசு மன்னராக முடிசூடுவார். அவர் மன்னராக தகுதியானவரோ இல்லையோ அவர்தான் முடி சூட வேண்டும்.
ஏனெனில் மன்னர் என்ற பதவி ஒரு குறியீடுதான்; அரசின் தலைவராக அவர் இருப்பாரே தவிர, அவர் எடுக்க வேண்டிய முடிவுகளை மந்திரி பிரதானிகள் அனைவரையும் கலந்துதான் எடுக்க முடியும்.
விரிவாகப் படிக்க - ராஜீவ் காந்தி வெற்றியும், சஞ்சய் தோல்வியும்: எப்படி செயல்படுகிறது வாரிசு அரசியல்?
விண்வெளி ஆடை பற்றாக்குறை
விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ரத்து செய்துவிட்டது.
கிறிஸ்டினா கோச் மற்றும் ஆனி மெக்கிளேன் பெண் விண்வெளி வீராங்கனைகள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று மின்கலன்களை பொருத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது.
விரிவாகப் படிக்க - விண்வெளி ஆடை பற்றாக்குறையால் நிகழாமல்போன வரலாற்று சிறப்புமிக்க முயற்சி
'குசு விட்டு தொல்லை கொடுத்த அதிகாரி'
ஆஸ்திரேலியாவில் ஒரு பொறியாளர் தனது முன்னாள் மேற்பார்வையாளர் திரும்பத் திரும்ப தன் மீது துர்நாற்றம் வீசும் வாயுவை வெளியிட்டதாகவும், அதனால் இழப்பீடு வேண்டுமென்றும் கூறி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் குசு விட்டதன் மூலம் அந்த பொறியாளர் கொடுமைக்கு உள்ளாகவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விரிவாகப் படிக்க - குசு விட்டு தொல்லை கொடுத்த அதிகாரி மீது வழக்கு தொடுத்த பொறியாளர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்