You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகிழ்வற்று இருக்கிறீர்களா? - 10 நிமிட பயிற்சியால் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச செய்யலாம்
நாம் மனநல மருத்துவரை சந்திக்க செல்லாமல் இருக்கலாம். எந்த மனநில பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போல இருக்கலாம். ஆனால், தினசரி வாழ்வு மற்றும் பணி சுமை தரும் மன அழுத்தம், நம்மை நிறைவாக வாழவிடுவதில்லை; குறைந்தபட்சம் திருப்தியுடன் கூட வாழவிடுவதில்லை.
ஆனால், இப்போது நவீன அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. நேர்மறையான மனநிலையை எப்படி வளர்த்தெடுத்து கொள்வது என்பது தொடர்பான எண்ணற்ற ஆலோசனைகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக எண்ணற்ற ஆய்வுகளும் நடந்துள்ளன.
இதுவெல்லாம் சரிதான். இதனை எப்படி நம் தினசரி வாழ்வில் பொருத்தி பார்ப்பது?
இங்கிலாந்தில் உள்ள மத்திய லான்காஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாண்டி இது குறித்து விளக்குகிறார்.
ஒரு மருத்துவ உளவியலாளராக அவரது அனுபவம், நமக்கு மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உதவலாம்.
இது குறித்து அவர் 'டென் மினிட்ஸ் டு ஹாப்பினெஸ்' என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.
'டென் மினிட்ஸ் டு ஹாப்பினெஸ்'
என்ன சொல்கிறார்?
பொதுவாக நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நமது டைரியை எடுத்து ஆறு பகுதிகளாக பிரித்து நம்மை ஆறு விஷயங்களை எழுத சொல்கிறார்.
என்ன 6 விஷயங்கள் அவை?
1.என்ன அனுபவம், உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்?அது சாதாரணமானதாக கூட இருக்கலாம்,.
2.என்னமாதிரியான பின்னூட்டங்களையும், பாரட்டையும் பெற்றீர்கள்?
3.உங்களுடைய அதிர்ஷ்டமான தருணம் என்ன?
4. இன்று நீங்கள் சாதித்ததாக நினைப்பது என்ன? அது மிகவும் சிறியதாககூட இருக்கலாம்
5.நன்றியுடன் நீங்கள் யோசிக்கும் விஷயம் என்ன?
6.உங்கள் அன்பை நீங்கள் எப்படி வெளிப்படுத்தினீர்கள்?
இதனை பட்டியலிடுங்கள்.
இது சாதாரண விஷயம். ஆனால், நம் தின நடவடிக்கைகளை இவ்வாறான 6 பகுதிகளை பிரித்து எழுதி, தினமும் ஆய்வு செய்வது வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்.
எழுதிய உடனே உங்களிடம் மாற்றம் வராது. முந்தைய தினம் எழுதியதை மீண்டும் படித்து பாருங்கள். என்னென்ன செய்து இருக்கிறீர்கள் என ஆய்வு செய்து பாருங்கள். நீங்கள் செய்த சிறு விஷயம் உங்களை நெகிழ வைக்கும், உங்களை அசைத்து பார்க்கும். உங்களது ஆளுமையை மேம்படுத்தும்.
'பத்து நிமிடம் ஒதுக்குவது'
பத்து நிமிடம் உங்களால் ஒதுக்க முடியாது என்று சொல்கிறீர்களா?. ராபின் ஷர்மா, தனது பொக்கிஷத்தை விற்ற துறவி புத்தகத்தில் கூறிய வரிகளை இங்கே பகிர்கிறேன்.
"எனது நண்பா…! உனது எண்ணங்களையும், வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கு தேவையான நேரம் கூட உனக்கு கிடையாது என்று சொல்வது, நீ கார் ஒட்டிச் சென்றுக்கொண்டிருப்பதால். பெட்ரோல் போடுவதற்கு உனக்கு நேரமில்லை என்று சொல்வது போல் உள்ளது." என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :