பிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? - விரிவான அலசல்

செவ்வாய்க்கிழமை நடப்பதாக இருந்த பிரெக்ஸிட் தொடர்பான வாக்கெடுப்பை தள்ளிப்போட பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நடக்கும் போது, பிரெக்ஸிட்டில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என இங்கே அலசுகிறோம்.

உலகமயமாக்கலுக்குப் பின் இங்கு எதுவும் தனி இல்லை, ஒரு நாட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றொரு நாட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் பிரெக்ஸிட் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பிரெக்ஸிட் வாய்ப்புகள் குறித்த அடிப்படையான சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

பிரெக்ஸிட்டில் என்னென்ன நிகழ்லாம்?

ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய திரும்பப் பெறுதல் சட்டம், சில நடைமுறைகளை வகுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரெக்ஸிட் வரைவறிக்கைக்கு எதிராக வாக்களித்தால் அதன்படி செயல்படலாம்.

அதன்படி, வரைவறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படும்பட்சத்தில் 21 நாட்களுக்குள் புதிய திட்டம் என்னவென்று சொல்ல வேண்டும்.

அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரைவறிக்கைக்கு எதிராக வாக்களிக்கும்பட்சத்தில், ஆறு வாய்ப்புகள் உள்ளன

  • உடன்பாடு இல்லை.
  • இரண்டாம் வாக்கெடுப்பு.
  • மீண்டும் பேச்சுவார்த்தை.
  • பொதுத் தேர்தல்.
  • பொது வாக்கெடுப்பு.
  • நம்பிக்கை இல்லா தீர்மானம்

சரி இந்த ஆறு வாய்ப்புகள் குறித்து பார்ப்போம்.

உடன்பாடு இல்லை

உடன்பாடு இல்லை என்றால், எந்த உடன்பாடும் இல்லாமல் பிரக்ஸிட் நிகழும். ஏற்கெனவெ, இது தொடர்பான சட்டம் உள்ளது. அதாவது, 29 மார்சு 2019இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும்.

ஒரு வேளை எந்த உடன்படிக்கையும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கும்பட்சத்தில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கலாம்.

உடன்பாட்டிற்கான இரண்டாம் வாக்கெடுப்பு

மீண்டும் இந்த வரைவறிக்கை தொடர்பான வாக்கெடுப்பை நடத்த அரசு முயற்சி செய்யலாம்.

ஆனால், தார்மிகரீதியாக அது சரியானது இல்லை. ஒரு விஷயத்திற்காக ஒரே கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டுமுறை வாக்களிக்க கூடாது என்ற நடைமுறை உள்ளது.

ஆனால், அதேநேரம் அரசு சில முன்முயற்சிகள் எடுத்து, ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தை இணங்க வைத்தால், மீண்டும் வாக்கெடுப்பிறகு எடுத்துக் கொள்ளப்படும்.

அவை தலைவர்தான் இரண்டாம் வாக்கெடுப்பு குறித்து முடிவினை எடுக்க வேண்டும்.

மீண்டும் பேச்சுவார்த்தை

மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் அரசு இறங்கலாம்.

சின்ன திருத்தங்கள் செய்யப்பட்டு,முன்பே கூறியது போல, மீண்டும் மக்கள் பிரதிநிதிகள் அவைக்கு இந்த வரைவறிக்கை அனுப்பப்படலாம்.

பிரெக்ஸிட்டை தள்ளிப் போட, அரசமைப்புச்சட்டம் அட்டவணை 50இன் நீட்டிப்பு தேவைப்படலாம்.

மறு பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டால், அரசு வேறு வழிகளை தேட வேண்டும்.

பொதுத் தேர்தல்

தெரீசா மேவின் ஒப்பந்தத்திற்கு அரசியல் ரீதியாக அங்கீகாரத்தை பெற, மீண்டும் பொதுத் தேர்தலை நடத்துவதுதான் இப்போதுள்ள சிக்கலிலிருந்து மீள ஒரே வழி.

அவருக்கு உடனே தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இல்லை.

ஆனால், நிரந்தரகால நாடாளுமன்ற சட்டத்தின்படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தேர்தல் நடத்த இசைவு தெரிவிக்கும்படி கோரிக்கை வைக்கலாம்.

மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு இசைவு தெரிவிக்க வேண்டும்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இந்த வரைவறிக்கை தோற்கும்பட்சத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுக்கலாம். தெரீசா மே கூட தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஒரு வாக்கெடுப்பு அழைப்பு விடுக்கலாம்.

பொது வாக்கெடுப்பு

மீண்டும் பிரக்ஸிட்டுக்கான வாக்கெடுப்பிற்கு அரசு அழைப்புவிடுக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: