காதலனை கொலை செய்து கறி சமைத்த இளம் பெண்

Moroccan woman in UAE

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, அரிசி மற்றும் இறைச்சியை வைத்து சமைக்கப்படும் பாரம்பரிய அரேபிய உணவை அப்பெண் சமைத்துள்ளார். (சித்தரிக்கும் படம்.)

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலரைக் கொலை செய்து, அவரது உடலின் எச்சங்களைக் கறியாகச் சமைத்து, அதை அருகில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவாகப் பரிமாறியதாக அமீரக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தக் கொலை மூன்று மாதங்களுக்கு முன்னரே நடந்திருந்தாலும், 30 வயதைக் கடந்துள்ள அப்பெண்ணின் சமையலறையில் மனிதப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மூர்க்கத்தனமான மனநிலையில் தாம் இந்தக் கொலையைச் செய்ததாக அப்பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசின் செய்தித்தாளான தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஆணுடன் அவர் ஏழு ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார்.

மொரோக்கோவில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆண் தெரிவித்தபின்னரே, அப்பெண் அவரை கொலை செய்ததாக தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது காதலரை அப்பெண் எப்படிக் கொலை செய்தார் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

ஓமன் எல்லையில் அமைந்துள்ள தங்கள் சொந்த நகரமான அல் அய்ன் பகுதியில் காணாமல் போன தனது சகோதரரை, கொல்லப்பட்டவரின் சகோதரர் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் பல்லை மட்டும் கண்டுபிடித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அது அப்பெண்ணின் காதலரின் பல் என்பது டி.என்.ஏ சோதனைகளின்போது உறுதிசெய்யப்பட்டது.

முதலில் தமது காதலரை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டதாக, தேடி வந்த அவரது சகோதரரிடம் அப்பெண் கூறியுள்ளார்.

நண்பர் ஒருவரின் உதவியுடன் அவர் உடல் எச்சங்களை அப்புறப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்பெண் மன நல பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :