டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்த அமெரிக்க ஆபாசப் பட நடிகையின் வழக்கறிஞர் கைது

ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கேல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ட்ரோமியின் சார்பாக மைக்கேல்தான் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.

செவ்வாய்க்கிழமை மைக்கேலுக்கும், அவரிடமிருந்து பிரிந்த மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவரின் மனைவிக்கு காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு செய்தி ஊடகமான டிஎம்இஜட் தான் இந்த கைது குறித்து புதன்கிழமை முதல்முதலாக செய்தி வெளியிட்டது.

தனக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக ஸ்ட்ரோமி கூறி வந்தார். ஆனால் டிரம்ப் இதனை மறுத்தார்.

இது குறித்த செய்திகளை விரிவாக படிக்க:

மைக்கேலுக்கு 2011 ஆம் ஆண்டு திருமணமானது. 2017ஆம் ஆண்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்தார் மைக்கேல் .

காயங்கள், வீக்கங்களுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டு மைக்கேல் மனைவி வெளியே சென்றதாக டிஎம்இஜட் கூறுகிறது. அவரது தாடையில் சிவப்பு தழும்புகள் இருந்ததாகவும் கூறுகிறது.

இந்த சம்பவம் குறித்து மைக்கேலின் அலுவலகம் இது வரை கருத்து தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :