புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பறவைக்கு 3-டி செயற்கை அலகு

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், ஹார்ன் பில் என்னும் பெரிய அலகு கொண்ட பறவைக்கு புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்ட பின் அதற்கு 3-டி தொழில்நுட்பத்தாலான செயற்கை அலகு பொருத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஜுராங் பறவைகள் பூங்காவில் இருக்கும் அந்த 22 வயது வண்ணப்பறவைக்கு 8 செ.மீ நீளத்தில் புற்று நோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர்.

ஜேரியின் அலகு பகுதியில் பெரும்பாலான திசுக்கள் புற்றுநோயால் அழிக்கப்பட்டிருந்தது.

சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் அகற்றப்பட்டன. ஒரு முழு 3-டி அலகு ஜேரிக்காக உருவாக்கப்பட்டது.

பற்களை ஒட்ட வைக்கக்கூடிய பிசின் மூலம் அந்த அலகு இறுக்கமாக ஒட்ட வைக்கப்பட்டது.

ஜேரியின் வாலிலிருந்து மஞ்சள் நிறமிகள் அதன் 3டி அலகுக்கு பூசப்பட்டது.

ஜேரி என்ற பெயருக்கு `கவசம் அணிந்த போர் வீரர்` என்று அர்த்தம்.

செப்டம்பர் மாதம் ஜேரி மருத்துவமனையிலிருந்து விடுக்கப்பட்டது. ஒரு புதிய அலகு உருவாகும் வரை ஜேரிக்கு இந்த செயற்கை அலகு பொருத்தப்பட்டிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :