வசந்த காலத்தில் சோலையாக மாறிய பாலை நிலம்

ஒவ்வொரு வசந்தகாலத்திலும் சில வாரங்கள் காட்டுப்பூக்களால் கம்பளம் விரித்ததுபோல, கெலைடோஸ்கோப் காட்சி போல தென்னாப்பிரிக்காவின் மேற்கு கடல் படுகை நெடுக அமைந்துள்ள வறண்ட நிலம் வண்ணமயமாக மாறிவிடுகிறது.

இந்த "சிறப்பு பூக்கள்" பாலைவனங்களிலும், உலக அளவிலுள்ள வறண்ட நிலங்களிலும் மலர்கின்றன.

வசந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் பூக்கள் மலர்வதைப் போல ஒரு சில நாடுகளில்தான் இப்படிப் பூக்கள் மலர்வது தொடர்ந்து நடக்கிறது.

ஜூலை இறுதி தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவு வரை இந்த மலர்கள் ஆண்டு தோறும் சில வாரங்கள் பூத்துக்குலுங்கும்.

ஆண்டில் முதல் முறையாக வெப்பக்காற்று வீசும்போது, இவை வாடிவிடும்.

அதிலிருந்து விழும் விதைகள் கோடைகால வெப்பத்தில் உலர்ந்து, அடுத்த ஆண்டு மழைக்காலம் வரை அப்படியே கிடக்கும்.

இந்த இயற்கை நிகழ்வை புகைப்படக்கலைஞர் டாம்மி டிரென்சார்டு படம் பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் பியேடௌ பள்ளத்தாக்கில் தன்னுடைய மனைவியோடு ஆண்டு விடுமுறையை கழித்தபோது, தன்னிச்சையாக இந்த கண்கொள்ளாக்காட்சியை பார்த்த டிரென்சார்டு "இதுவொரு அழகான கனவு காட்சி" என்று குறிப்பிடுகிறார்.

"குறைவான நாட்களே இருக்கின்ற இந்த இயற்கையின் காட்சி எல்லாவற்றையும்விட சிறப்பாகவுள்ளது. தென்னாப்பிரிக்கா காட்டு விலங்குகளை பார்க்கும் இடமென மக்கள் நினைக்கிறார்கள். காட்டு விலங்குகளை பார்வையிடுவதற்கு போட்டியாக இந்த காட்டுப்பூக்களின் காட்சி அமைகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :