You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா: சோச்சியில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்த விமானம்
ரஷ்யாவின் சோச்சி நகரில் தரையிறங்கிய பயணியர் விமானம் ஒன்று ஓடுதளத்திற்கு வெளியே சென்று தீப்பற்றியதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
உடேர் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் யுடி579 என்ற ஒரு போயிங் 737-800 ரக விமானம் 164 பயணிகளையும், 6 விமான ஊழியர்களையும் கொண்டு மாஸ்கோவிலிருந்து சோச்சி நகருக்கு சென்றிருந்தது.
விமான நிலைய சுவரில் மோதிய அந்த விமானம் கொளுந்துவிட்டு எரிவதையும், ஆற்றங்கரையில் விழுவதையும் காணொளி காட்டுகிறது.
சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்தது. பிறர் கார்பன் மோனாக்ஸைடால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புதவி நடவடிக்கையின்போது, விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாக சோச்சி விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அதிவேகமாக காற்று அடித்து கனமழை பெய்தபோது, இந்த விமானம் தரையிறங்க முயற்சித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமான ஓடுதளத்தை விட்டு வெளியேறியவுடன் விமானத்தின் சக்கர இணைப்பு அமைப்பும், ஓர் இறகு பகுதியும் சேதமடைந்த பின்னர், அது தீப்பற்றி எரிந்துள்ளது.
காயமடைந்தோரில் 3 பேர் குழந்தைகள். இப்போது தீ அணைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை ஒன்றை ரஷ்ய புலனாய்வு குழு தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் இதே விமான நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று வட மேற்கு சைபீரியாவில் விழுந்து மோதியதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
ருஷ்யன் ஏர்லைனர் விமானம் கடந்த பிப்ரவரி மாதம் விழுந்து நொறுங்கியது, தேசிய வான்வழி பாதுகாப்பு பற்றிய கவலைகளை எழுப்பியது.
2015ம் ஆண்டுக்கு பிறகு, இது 3வது பெரிய விமான விபத்தாகும்.
காயலான் கடைக்கு போகாமல் காப்பிக் கடையான விமானம்
பிற செய்திகள்:
47 நொடிகளில் இலக்கை அடையும் விமானம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்