You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘வறுமையும், சுகவாழ்வும்’ - பொருளாதார சமனின்மையை சொல்லும் பத்து படங்கள் #2MinsRead
உலகெங்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான் மிகப்பெரிய சமூக சிக்கலாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் அரசியல் ஸ்திரமற்றதன்மைக்கும் காரணமாகிறது.
புகைப்பட கலைஞர் ஜானி மில்லர் தன் ட்ரோன் புகைப்பட கருவியுடன் தென் ஆஃப்ரிக்கா, மெக்ஸிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணித்து அங்கு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வை பதிவு செய்திருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது அந்த மக்களின் வாழ்விடங்கள்.
மில்லர் சமனின்மை திட்டம் என்ற திட்டத்தை ஏப்ரல் 2016 ஆம் ஆண்டுதொடங்கினார் ஜானி மில்லர். இதன் நோக்கம் மக்கள் எப்படி இந்த பொருளாதார சமனின்மையை எதிர்கொள்கிறார்கள் மற்றும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பதிவுசெய்வதுதான்.
தென் ஆஃப்ரிக்காவை சேர்ந்த இந்த புகைப்பட கலைஞர் கூறுகிறார், "கேப் டவுனில் விமான நிலையத்தில் நீங்கள் இறங்கிய மறு கனமே, உங்களை சுற்றி குடிசை பகுதிகள் மட்டுமே சூழந்திருப்பை நீங்கள் காண்பீர்கள்".
அங்கிருந்து பத்து நிமிடங்கள் நீங்கள் பயணம் செய்தால் கொஞ்சம் பணக்கார பகுதியினை காண முடியும். இதுதான் தென் ஆஃப்ரிக்காவின் நிலை. உலகம் முழுவதும் இந்த சமனின்மைதான் பல்வேறு நாடுகளில் தொடர்கிறது. ஆனால், அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.
உலகம் முழுவதும் இந்த சமனின்மைக்கு எதிரான சவால்கள் எழுந்துள்ளன. இந்த தலைமுறை இதனை கேள்வி கேட்கிறது என்கிறார் மில்லர்.
இந்த சமனின்மையை பொட்டில் அடித்தது போல புரியவைக்கும் புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். இவை இந்தியா, தென் ஆஃப்ரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டவை.
இந்த புகைப்படங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுப்பதில் விசாலமான ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார் மில்லர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்