'ப்ளேபாய்' இதழின் முன்னாள் மாடல் கழுத்து நெரிக்கப்பட்டு மரணம்

முன்னாள் ப்ளேபாய் மாடல் ஒருவர் அவரது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 22-ம் தேதி பெனிஸ்லிவேனியாவில், 36 வயதான கிறிஸ்டினா கார்லின்-க்ராஃப்ட் அவரது வீட்டின் படுக்கையறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

புதன்கிழமை இரவு 9.15 மணி அளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக லோவெர் மெரியான் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதே மரணத்திற்கான காரணம் என மான்ட்கொமெரி கவுன்டி கொரோனர் அலுவலகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துளளது.

அவரது ஆண் நண்பரே இவ்வீட்டுக்கு சொந்தக்காரர். அவருடன் கிறிஸ்டினா ஒன்பது வருடங்கள் டேட்டிங்கில் வாழ்ந்துவந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது உள்ளூர் செய்தி நிறுவனம்.

தனக்கு கிடைத்த தகவலின்படி, இரவு வெளியில் சென்றபிறகு தனது வீட்டில் நடந்த கொள்ளை நடந்துள்ளதாக சனிக்கிழமையன்று கிறிஸ்டினா தெரிவித்ததையடுத்து திருட்டு குறித்து காவல்துறை விசாரித்து வந்துள்ளதாக தெரிகிறது என இன்குயிரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகை, கைப் பை உள்ளிட்ட திருடுபோன பொருள்களை கடந்த புதன்கிழமை போலீசார் கண்டுபிடித்தது. இதை அவரிடம் கொடுக்கச் சென்றபோதுதான் போலீசார் கிறிஸ்டினாவின் உடலை கண்டுபிடித்தனர் என இன்குயிரர் குறிப்பிட்டுள்ளது.

கொள்ளை நடந்த தினம் மற்றும் புதன்கிழமை என இரண்டு நாட்களும் ஒரு சந்தேக ஆண் நபர் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன என இன்குயிரர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று அந்நபர் குடியிருப்பு வீட்டுக்குள் நுழையும் காட்சி இருப்பதாகவும் ஆனால் வெளியே வரும் காட்சி இல்லை எனவும் அதில் குறிப்படப்பட்டுள்ளது.

மாடல் கார்லின் க்ராஃப்ட் நியூயார்க் சிட்டியைச் சேர்ந்தவர். முன்னதாக வேனிட்டி ஃபேர், மேக்ஸிம் இதழ், விக்டோரியா சீக்ரட் மற்றும் பிளேபாய் உள்ளிட்டவற்றில் அவர் மாடலாக இருந்துள்ளார்.

பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :