You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தற்காலிக துறவு முடிந்து வீடு திரும்பிய தாய்லாந்து குகை சிறுவர்கள்
தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கிக்கொண்ட பெரும்பாலான சிறுவர்கள் இளம் துறவிகளாக பௌத்த மடாலயத்தில் தங்கியிருந்த பின்னர் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த சிறுவர்களுடைய மீட்பு நடவடிக்கையின்போது இறந்த முக்குளிப்பு வீரரின் நினைவாக வைல்டு போர்ஸ் கால்பந்து அணியின் இளம் வீரர்கள் 11 பேர் புதிய துறவிகளாக இங்கு தங்கியிருந்தனர்,
பயிற்சியாளர் ஆவதற்கு முன்பு ஏற்கெனவே துறவியாக இருந்த 25 வயதான துணை பயிற்சியாளர் எக்கபோல் சாந்தாவாங் மூன்று மாதங்கள் இந்த மடாலத்தில் தங்கியிருப்பார்.
ஒரு சிறுவன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் துறவறம் போகவில்லை.
தாய்லாந்தின் வடக்கு பகுதியிலுள்ள மயே சாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பௌத்த மடாலயத்தில் ஒன்பது நாட்கள் தங்கிய பின்னர் 11 முதல் 17 வயது வரையான இந்த இளம் துறவிகள் வீடு திரும்பியுள்ளனர்.
துரதிருஷ்டத்தை அனுபவித்த ஆண்கள் கடைபிடிக்கும் பாரம்பரியமாக தாய்லாந்தில் இந்த வழக்கம் இருந்து வருகிறது.
இவ்வாறு ஆன்மிக ரீதியாக சுத்தமாகுவதாகவும், அவர்களை மீட்கின்ற நடவடிக்கையின்போது இறந்த முன்னாள் சீல் கடற்படை முக்குளிப்பு வீரர் சமான் குனானை நினைவுகூர இவர்களின் பெற்றோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் இந்த சிறுவர் குழுவினர் பெற்ற இந்த அனுபவம் அமையும்.
ஒன்பது தாய்லாந்தில் அதிஷ்ட எண்ணாகும். ஒன்பது நாட்களாக தியானம், செபம் செய்தல் மற்றும் பௌத்த விகாரையை சுத்தம் செய்தல் என இந்த இளம் துறவியர் நேரத்தை கழித்துள்ளனர்.
தங்களுடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் சந்திப்பதற்கு முன்னால், பெளத்த மத ஆசீர்வாதம் பெற்ற இந்த இளம் துறவிகள், "இப்போது நான் பொதுநிலையினர்" என ஒவ்வொருவரும் கூறிவிட்டு மொத்தமாக விகாரையில் இருந்து அனுப்பப்பட்டனர்.
தாய்லாந்திலுள்ள தாம் லுவாங் குகையில் மலையேற சென்ற கால்பந்து குழுவை சேர்ந்த 12 சிறுவர்களும், அவர்களின் பயிற்சியாளரும் தீடீரென ஏற்பட்ட கனமழையால் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
ஒன்பது நாட்களுக்கு பின்னர் உயிரோடு இருப்பதை கண்டுபிடித்த பின்னர், வெளிநாட்டு குழுவினரின் உதவியோடு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்: என்ன செய்கிறது மீட்புக் குழு?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்