You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து: குகைக்குள் சிக்குவதால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்ன?
12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக தாய்லாந்து குகைக்குள் சிக்கிய பின்னர், இரண்டு நாட்கள் நடைபெற்ற மீட்புதவியில் 11 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இவ்வாறு சிக்கியிருந்ததால், அவர்கள் நீண்டகால பாதிப்புகளை அனுபவிப்பார்களா?
இத்தகைய நிலையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்கொள்ளுகின்ற சவால்களை பிரிட்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மனநல மருத்துவரான அன்டிரியா டனெசி குறிப்பிடுகிறார்.
குறைந்த மற்றும் நீண்டகால உணர்ச்சி அறிகுறிகள்
இந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் உளவியல் ரீதியாக அதிர்ச்சிகரமான அனுபவத்தை பெற்றுள்ளனர். அவர்களின் உயிர் வாழ்க்கையை அச்சுறுத்துகின்ற நிலைமையை அவர்கள் அனுபவித்துள்ளனர்.
இதன் விளைவாக, இந்த மீட்புதவி நடவடிக்கை முடிந்த பின்னர், அவர்கள் பாதுகாப்பாக வெளிவந்த பின்னர். சில குழந்தைகளிடம் உணர்ச்சி அறிகுறிகள் தோன்றலாம்.
அழுது கொண்டும், பெற்றோரோடு ஒட்டியே இருப்பது
அழுது கொண்டும், பெற்றோரோடு ஒட்டிகொண்டே இருப்பவராக இந்த சிறார்கள் இருக்கலாம்.
ஆனால், பல நாட்களுக்கு பின்னர், அவர்கள் மன அழுத்தம், கவலை மற்றும் பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தம் போன்ற மன நல பிரச்சனைகளை பெறுகின்ற நிலை ஏற்படலாம்.
பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தம்
பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பல குழந்தைகள், இந்த சம்பவம் பற்றி; நினைவூட்டுவதை தவிர்க்க செய்வதன் மூலம் இதனை சமாளிக்க பார்ப்பார்கள்.
இந்த சம்பவத்தை அதிக அளவில் நினைவூட்டப்படும் சூழ்நிலைகள் அவர்களை சுற்றி நிலவும் என்பதால், இத்தகைய நிலைமை அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.
செய்தி நிறுவனங்கள் அணுகுவது அல்லது எல்லா ஊடகங்களிலும் தங்களையே பார்ப்பதாக இந்த நிலைமை இருக்கும்.
மேலும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அவர்கள் அனுபவித்த இந்த சம்பவம் பற்றி விசாரிப்பதாலும் இந்த சம்பவத்தை நினைவூட்டுகின்ற நிலைமை ஏற்படலாம்.
இவ்வாறு இந்த சம்பவத்தை நினைவூட்டுகின்ற சம்பவங்களால், இந்த நிலைமை மிகவும் மோசமாகலாம்.
கேள்விகளை தவிர்த்து விடுவதற்காக பிறரிடம் இருந்து சில குழந்தைகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வார்கள்.
இருளை கண்டால் பயம்
இரவு வேளைகளில் இருட்டாக இருப்பதை விரும்பால் இருப்பது இன்னொரு பிரச்சனையாக அமையலாம்.
இரவுநேரத்து இருள், அவர்கள் குகையில் சிக்குண்டிருந்ததையும், அதற்கு மேற்கொள்ளப்பட்ட மீட்புதவி நடவடிக்கையையும் நினைவூட்டும் என்பதுதான் இதற்கு காரணமாகும்.
இந்த சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் குறுகிய மற்றும் நீண்ட காலம் மனநல நிபுணர்களின் உதவியை பெறுவது மிகவும் முக்கியமானது.
இயல்பான வாழ்க்கையை பெற தொழில்முறை உதவியின் அவசியம்
இருள் அல்லது எதிர்மறையான உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படாமல் அவர்களின் அனுபவங்கள் பற்றி பேசப்படுவதை கேட்கிறபோது, இந்த குழந்தைகள் கவலைக்குள்ளாவதை எதிர்கொள்ள உதவுவதற்கு படிப்படியாக தொழில்முறை உதவி வழங்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
2010ம் ஆண்டு சிலி நாட்டு சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது போன்ற, சம்பவங்கள் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன.
இடிந்த சுரங்கத்தில் அகப்பட்டு கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வது சிலி நாட்டு தொழிலாளர்களுக்கு எளிதாக அமையவில்லை.
ஆனால், அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை மற்றும் பயிற்சிகள் இத்தகைய நிலைமைகளை சமாளிக்க சில தயாரிப்புகளை வழங்கியிருந்தது. அவர்கள் பெற்ற இந்த அனுபவம் ஏதாவது ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டதாகும்.
ஆனால், குகையில் சிக்கிய இந்த தாய்லாந்து குழந்தைகளை பொறுத்தமட்டில் இந்த சம்பவம் முற்றிலும் எதிர்பார்க்கப்படாதது.
எனவே, பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த அறிகுறிகள் இவர்களுக்கு பின்னர் உருவாகும் சக்தியும் அதிகம் காணப்படுகிறது.
எப்படியானாலும், இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது இந்த குழந்தைகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகை: “அனைவரும் இன்றே மீட்கப்பட வாய்ப்பு” - LIVE
- உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
- தொப்பை இருந்தால் வேலை இல்லை - கர்நாடக காவல் துறை உத்தரவு
- நீட் தேர்வில் நீதிமன்றத் தீர்ப்பால் புதிய திருப்பம்: தீர்வா, குழப்பமா?
- ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போன 'அமித் ஷாவே திரும்பிப் போ'!
- போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா: எதிர்கட்சிகள் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்