உலக பார்வை: உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை

சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் இடையிலான விமான பாதை உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதையாக மாறியுள்ளது. இந்த பாதையில் ஒரு நாளுக்குச் சராசரியாக 84 விமானங்கள் செல்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான விமான பயண நேரம் சுமார் ஒரு மணி நேரமாகும்.

கிம் உடனான சந்திப்புக்கு தயாராகும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பும், தென் கொரிய அதிபர் முன் ஜே-இல்லும் மே 22-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளனர். டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கான இடமும், நேரமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார், ஆனால் கூடுதல் தகவல்களை அவர் தரவில்லை.

அர்ஜென்டீனா: வட்டி விகிதம் கடும் உயர்வு

அர்ஜென்டீனாவின் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது இந்த வாரத்தில் நடந்த மூன்றாவது உயர்வாகும்.அர்ஜென்டீனாவின் 25% பண வீக்கத்தைக் குறைக்கவும், பணத்தை நிலைப்படுத்தவும் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக அர்ஜென்டீனாவின் மத்திய வங்கி கூறியுள்ளது.

துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படாது

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொள்ளபோவதில்ல்லை என தேசிய துப்பாக்கி சங்க உறுப்பினர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: