பெண்கள் எவ்வாறு உடைய அணியக் கூடாது? தஜிகிஸ்தான் அரசு புத்தகம் வெளியீடு

பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும், எவ்வாறு உடைய அணியக் கூடாது? என்பதை குறிப்பிடும் புத்தகம் ஒன்றை தஜிகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

தஜிகிஸ்தானின் பாரம்பரிய உடைகளை அணிய அந்நாட்டு கலாசார அமைச்சகம் ஊக்கப்படுத்துகின்றது.

பட மூலாதாரம், TAJIK CULTURE MINISTRY/ASIA-PLUS

படக்குறிப்பு, தஜிகிஸ்தானின் பாரம்பரிய உடைகளை அணிய அந்நாட்டு கலாசார அமைச்சகம் ஊக்கப்படுத்துகின்றது.

இந்தப் "பரிந்துரைகளின் புத்தகம்" அந்நாட்டின் கலாசார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 7 வயது முதல் 70 வயதான வரையான பெண்கள், பொருத்தமான ஆடைகளை அணிந்துள்ள மாடல் அழகிகளின் படங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்று 'த ஆசியா-பிளஸ்' செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது.

வேலை நேரத்தில், தேசிய மற்றும் மாநில விடுமுறைகளில், திருமணங்களுக்கு, வார இறுதியிலும் கூட என்ன ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு அறிவுறுத்தும் அத்தியாயங்களை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டு பெண்கள் எதனை அணிய கூடாது என்று புத்தகத்தின் கடைசியில் ஓர் அத்தியாயம் விளக்குகிறது.

அதிபர் எமோமிலி ரஹ்மோன் தெரிவித்திருக்கும் கண்டிப்பு ஒருபுறம் இருந்தாலும், இன்னும் புகழ் இருக்கின்ற இஸ்லாமிய ஆடைக்கு எதிரான தேசிய பரப்புரையின் ஒரு பகுதியாக கறுப்பு ஆடைகள், தலை துணி, மற்றும் கிஜாபுக்கு எதிராக இந்த புத்தகம் அறிவுரை வழங்குகிறது.

வேலை செய்வோர் அணிவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆடை

பட மூலாதாரம், TAJIK CULTURE MINISTRY/ASIA-PLUS

படக்குறிப்பு, வேலை செய்வோர் அணிவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆடை

ஊடுருவி தெரிகின்ற மெல்லிய மேற்கத்திய உடைகளும், குட்டை பாவாடையும் அனுமதிக்கப்படவில்லை. பொருத்தமான ஆடைகளில் மார்பகத்தின் மேல்புறத்தை காட்டும் வகையிலான மற்றும் பின்பக்கமில்லாத ஆடைகளுக்கு ஊக்கமளிக்கப்படவில்லை.

பொதுவிடங்களில் குதிகால் உயர காலணி அல்லது எளிதாக களன்று விடும் செருப்பு (சிலிப்பர்) அணிய கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுபோல இறுக்கமான கால்சட்டைகள் அல்லது செயற்கை துணிகள் உடல் நலத்திற்கு கேடானது என்று இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் முக்கியமாக முஸ்லீம் மக்களே வாழ்ந்தாலும், பாரம்பரிய கலாசாரத்தில் இருக்கும் மதசார்பற்ற நாடு என்பதை அரசு உறுதி செய்ய முயன்று வருகிறது.

'நீங்கள் அதை வாங்க முடியும் என்றால் நல்லது'

இந்தப் புதிய புத்தகம் பற்றி வெளிவந்துள்ள சமூக ஊடக எதிர்வினைகள் எல்லாம் நேர்மறையாக மட்டும் இருக்கவில்லை.

சில மேற்கத்திய ஆடைகள் வார இறுதிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தஜிகிஸ்தான் வெளியிட்டுள்ள புத்தகம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், TAJIK CULTURE MINISTRY/ASIA-PLUS

படக்குறிப்பு, சில மேற்கத்திய ஆடைகள் வார இறுதிக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தஜிகிஸ்தான் வெளியிட்டுள்ள புத்தகம் தெரிவிக்கிறது.

இந்த கருத்து மிகவும் நன்றாக உள்ளது என்று ஒருவர் புகழ்ந்துள்ள நிலையில், தேசிய ஆடைகளுக்கு உயர்ந்த விலை நிர்ணயித்திருப்பதற்கு சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். "கலாசார அமைச்சக அதிகாரிகள் எங்களுக்காக ஆடைகள் வாங்கி தரட்டும்" என்று அவர்கள் கோரியுள்ளனர்.

வட கொரியா போல நாட்டை மாற்றுவதாக ஒருவர் ஆட்சியாளர்களை குற்றஞ்சாட்டியுள்ளார். "கலாசார அமைச்சகம் பயனில்லாத பிரச்சனைகளை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அக்கறை காட்ட வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுக்கமான ஆடைகள் உடலின் சில பாகங்களை மிகைப்படுத்தி காட்டுகிறது என்பதற்கு எதிராக, "உடலின் எந்தப் பகுதியை? மூளையிலுள்ள வீக்கத்தையுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

உலகிலேயே மனிதநேய மிக்க சிறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

காணொளிக் குறிப்பு, உலகிலேயே மனிதநேய மிக்க சிறை பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: